பெரும் பூகம்ப அபாயத்தில் வட இந்தியா
டெல்லி:
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் இமயமலையின் அருகில் உள்ள நாடுகளுக்கு பெரும் பூகம்ப அபாயம்இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அவர் கூறுகையில், இந்தியாவின் வடபகுதி, இமயமலையின் அடிவாரத்தில் உள்ள பாகிஸ்தான், நேபாளம்,வங்கதேசம் மற்றும் பூடான் போன்ற நாடுகளில் பெரும் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.
இமயமலையின் அடிப்பகுதியில் பூமியின் கீழே ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையிலும் இதற்கு முன்னர்இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூகம்பங்களை வைத்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தான் பூகம்பஅபாயம் குறித்து தெரிய வந்தது.
கடந்த 1905ம் ஆண்டு இமயமலையை ஒட்டிய கங்கைச் சமவெளிப் பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போதே20,000 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போது அந்தப் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. எனவே இனி பூகம்பம் ஏற்பட்டால் பெருத்தஉயிர்ச்சேதமும், பொருட்சேதமும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறைந்ததது 5 கோடி மக்களாவது இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், இதைத் தடுப்பது என்பதுஇயலாத ஒன்று.
இவரது கருத்தை அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான ரோஜர்பில்ஹாம், பீட்டர் மில்னர் ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications