திருச்சியில் தீவிபத்து- ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம்
சென்னை:
திருச்சி அருகே நடந்த பயங்கர தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட குடிசைகள் கருகின. ரூ. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்சேதமடைந்தன.
ஒரு குடிசை வீட்டில் கொசுவை விரட்டுவதற்காக குப்பைகள், சுள்ளிகளைப் போட்டு மூட்டம் போட்டுள்ளனர். அதிலிருந்துகிளம்பிய நெருப்புப் பொறி குடிசையில் பற்றிக் கொண்டுள்ளது. காற்றும் பலமாக அடித்ததால் அப்படியே பிற குடிசைகளுக்கும்நெருப்பு பரவியது.
இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. ஆனால் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.வீடுகள், வீடுகளில் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தீயில் கருகி விட்டன.
தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மணிவாசன்வெள்ளிக்கிழமை காலை பார்வையிட்டார். தீவிபத்தில் வீடு, உடமைகளை இழந்தவர்களுக்கு தலா ரூ. 1000, 5 கிலோ அரிசி, ஒருலிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை அவர் வழங்கினார்.
இப்பகுதியில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தரப்படும் என அப்பகுதி மக்களுக்கு அவர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications