விநாயகர் ஊர்வலம் மசூதி வழியே செல்லத் தடை
சென்னை:
திருவல்லிக்கேணி மசூதி வழியே விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை தடைவிதித்துள்ளது.
சென்னையில் 25, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் ஊர்வலம் நடத்ததமிழக அரசு அனுமதி வழங்கியது.
சென்னை சிவசேனா அமைப்பினர், இந்து முன்னணி அமைப்பு மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பு ஆகியவைவிநாயகர் ஊர்வலம் நடத்த இருக்கின்றன.
இதையடுத்து ஊர்வலம் செல்லும் வழியில் பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னைமாநகர் போலீசார் பல கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர்.
அதன் விவவரம் வருமாறு,
மத்திய சென்னையில் இருந்து ஊர்வலம் செல்பவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பாரதியார் சாலைவழியாக காமராஜர் சாலையைக் கடந்து கடற்கரையை அடைய வேண்டும். அவர்கள் திருவல்லிக்கேணிநெடுஞ்சாலை வழியாக ஐஸ்ஹவுஸ் மசூதி வழியாக வரக் கூடாது.
மேலும் ஊர்வலம் செல்பவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பாரதியார் சாலைச் சந்திப்பில் உள்ள மசூதிஅருகே வேண்டுமென்றே காலம் தாழ்த்தக் கூடாது. அவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தராமலும்,பிரச்சனைகளை ஏற்படுத்த முயலாமலும் மாலை 5 மணிக்கு முன்பாகவே இந்த இடங்களைக் கடந்து விட வேண்டும்.
சிறுபான்மையினர் தொழுகைக்குச் செல்லும் நேரத்தில் அந்தப் பகுதியில் ஊர்வலத்தினர் வருவது பிரச்சனைகளைஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென் சென்னைப் பகுதியில் இருந்து வருபவர்கள் எல்.பி.ரோடு, படேல் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர்சாலை வழியாக கடற்கரையை அடையவேண்டும்.
வட சென்னைப் பகுதியினர் ஈ.வெ.ரா. சாலை, முத்துச்சாமி பாலம், போர் நினைவுச் சின்னம், காமராஜர் சாலைவழியாக கடற்கரையை அடைய வேண்டும். அவர்கள் முத்துச் சாமி பாலத்திலிருந்து மன்றோ சிலையை நோக்கி,அண்ணா சாலைக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இவ்வாறு மசூதிகள் உள்ள பகுதிகள், மற்றும் நகரின் முக்கியச் சாலையான அண்ணா சாலை ஆகியவற்றின்வழியாக ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications