திமுக, த.மா.கா.ஜ.பே உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை:
தங்களுக்கு பேச வாய்ப்பளிக்காகதை கண்டிப்பதாக கூறி திமுக, தமாகா ஜனநாயகபேரவை உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்புசெய்தனர்.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா பட்ஜெட்டை பாராட்டி பேசினார்.அவர் பேச துவங்கியதுமே திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்புவழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் யசோதா பேசியபிறகு வாய்ப்பு தருவதாக துணை சபாநாயகர் கூறினார்.எங்களுக்கு 6 மணிக்குள் பேச வாய்ப்பளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். எனவேநாங்கள் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திமுகஎம்.எல்.ஏவுமான துரை முருகன் கேட்டார்.
அதே சமயம் தமாகா எம்.எல்.ஏ ஞானசேகரன் தங்களுக்கும் பேசுவதற்குவாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆளுங்கட்சி கொறடா நரசிம்மன் எழுந்து எங்களுக்கும் பேச வாய்ப்பளிக்கவேண்டும் என்று கேட்டார்.
ஆனால் யாருக்கும் வாய்ப்பு வழங்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. .யசோதாவைபேசுமாறு துணை சபாநாயகர் அழைத்தார். இதை எதிர்த்து திமுக, தமாகா ஜனநாயகபேரவை உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
யசோதா பேச்சு:
இந்த பட்ஜெட்டில் எதை பாராட்டுவது எதை விடுவது என்று தெரியாத அளவில்சிறப்பான பட்ஜெட் இது.
கடந்த ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் காட்டிய அக்கரையை குடிநீர் பிரச்சனையைகாட்டியிருந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருக்குமா?
மனித உரிமை பற்றி இப்போது பேசுகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 17 பேரை சுட்டுக்கொன்ற போது மனித உரிமை எங்கே போனது.
கோவை குண்டு வெடிப்பின் போது மனித உரிமை எங்கே போனது?
முன்னாள் முதல்வர், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டது மனித உரிமை மீறல்என்றால், ஒரு மத்திய அமைச்சர் போலீசாரை தாக்கியது மனித உரிமை மீறல்இல்லையா?
முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் ஒரு அதிகாரியை தாக்கினார் என்பதற்காகஅவரை பதவியைவிட்டு நீக்கிவிட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டதே? அவருக்குஒரு நியாயம், போலீசை தாக்கிய மாறனுக்கு ஒரு நியாயமா? இவ்வாறு யசோதாபேசினார்.












Click it and Unblock the Notifications