தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை: கர்நாடகா கைவிரிப்பு
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது போல் தண்ணீர்திறந்துவிட இயலாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயிர்களை காக்க காவிரியில் கர்நாடகம் உடனடியாக நீரைத் திறந்து விட வேண்டும என ஜெயலலிதாபிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்திருந்தார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் ஜெயலலிதா ஒரு கடிதம்எழுதியிருந்தார். அதில் காவிரி விவகாரம் குறித்துப் பேச வரும் 26ம் தேதி நேரம் ஒதுக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது.ஆனால் ஜெயலலிதா கோரியபடி 26ம் தேதி பேச்சுவார்த்தைநடத்தமுடியாது என்று கூறிவேறு தேதியை விரைவில் தமிழக அரசுக்கு தெரிவிப்பதாக கர்நாடக அரசின்நீர்வளத்துறை எச்.கே பட்டீல் கூறினார்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் 6ம் தேதி டெல்லியில் காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டுவதகாமத்திய நீர்வளத்துறை அமைச்சர் சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட கர்நாடகஅமைச்சர் பாட்டீல், நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகம் கேட்டக் கொண்டுள்ளபடி தண்ணீர் திறந்துவிட முடியாது. எந்த வருடமும் இல்லாத விதமாக இந்த வருடம்கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தென் மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டது.
இதனால் கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர் இல்லை. எனவேதமிழகம் கேட்டுக் கொண்டுள்ளபடி தண்ணீர் திறந்துவிட முடியாது. கர்நாடகத்தின் நிலை குறித்து காவிரி நதிநீர்கண்காணிப்பு கூட்டத்திலும் எடுத்துரைப்போம் என்றார் பாட்டீல்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications