நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம்: கருணாநிதி புறக்கணிப்பு
சென்னை:
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் திமுக தலைவர்கருணாநிதிக்குப் பதிலாக, திமுக பிரதிநிதிகள் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிகிறது.
சமீப காலமாக, இதுபோன்ற கூட்டணிக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார் அவர். உடல் நிலைகருதியும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை மாற்றத்தாலும் அவர் டெல்லிசெல்வதைத் தவிர்த்து வருகிறார்.
இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு தற்போதைய தமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எதுவும்எடுக்காமல் இருப்பதாலேயே தே.ஜ. கூட்டணிக் கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார் கருணாநிதி. அந்த வகையில்,திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தையும் தற்போது அவர் புறக்கணித்துள்ளார்.
ஆனால், இக்கூட்டத்தில், முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் திமுக சார்பில் கலந்து கொள்வார்கள் என்றுகருணாநிதி அறிவித்துள்ளார். இது குறித்து கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
திமுகவுக்கும், பா.ஜ.கவுக்கும் கூட்டணி தொடர்கிறது. லட்சுமணன் அதிமுகவின் பெருமைகளை மேலிடத்துக்குஎடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார் என்கிறீர்கள். லட்சுமணன் அப்படிச் சொன்னதை ராமனிடம் கேளுங்கள்என்னிடம் கேட்காதீர்கள்.
மேலும் லட்சுமணனுக்கு வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாம். எங்களுக்கும் பா.ஜ.கவிற்கும் கருத்துவேறுபாடு இல்லை என்றார் கருணாநிதி.
லட்சுமணன் பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தவர். இப்போது அவர் எம்.எல்.ஏவாக இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தில் பா.ம.க.
பாட்டாளி மக்கள்கட்சி சார்பில் அதன் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி கலந்து கொள்வார்என்று தெரிகிறது. இக்கட்சி தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விட்டது.
மாநில அளவில் இன்னும் திமுகவிடமிருந்து "கிரீன் சிக்னல்" கிடைக்காததால் கூட்டணிக்குள் நுழையவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications