நில மோசடி வழக்கில் ரமேஷின் தம்பி ரமணன் கைது
சென்னை:
நிலத்தை மோசடியாக அபகரித்தது தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட சென்னை தொழிலதிபர் ரஷிேன் தம்பிரமணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், புதிய திருப்பமாக ரமேஷின் தம்பியான ரமணன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.நிலத்தை போர்ஜரி பெயரில் அபகரித்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரமேஷும்சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரமேஷ் சென்னை மேயர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான நண்பர் ஆவார். சென்னை மேம்பால வழக்குகளில்ஸ்டாலினுடன் சேர்த்து ரமேசும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான விவரம் வருமாறு:
அண்ணாநகரைச் சேர்ந்த பழனி என்பவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒரு புகார் கொடுத்தார்.அந்தப் புகாரில், தான் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தனக்குச் சொந்தமான நிலத்தில் காம்பவுன்ட்சுவர் கட்டுவது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து மறைந்த ரமேஷிடம் கூறியதாகவும், தான் அதைத் தீர்த்துத் தருவதாக கூறி நிலத்தின் ஒரிஜினல்பத்திரங்களை ரமேஷ் பெற்றுக் கொண்டார். ஆனால் அவற்றைப் பின்னர் அவர் திருப்பித் தரவில்லை.
இந்நிலையில், காளிதாஸ் என்பவர் எனக்குச் சொந்தமான நிலத்தை தனக்குச் சொந்தம் என்று கூறி அந்த இடத்தில்தனது பெயர் பொறித்த போர்டையும் வைத்தார். இதுகுறித்து உடனடியாக நான் போலீஸில் புகார் செய்தேன்.
இந்த நிலையில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். அதற்குப் பிறகு 2 நாட்கள் கழித்து ரமணன் என்னிடம்வந்து ரமேஷ் எழுதியதாக ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதத்தில், எனது நிலம் தொடர்பாக சில பிரச்சினைஏற்பட்டு விட்டதால் அந்த நிலத்திற்குப் பதிலாக தனக்குச் சொந்தமாக உத்தண்டி பகுதியில் உள்ள நிலத்தைத்தருவதாக ரமேஷ் கூறியிருந்தார்.
இதற்கு உச்சகட்டமாக எனது நிலத்தை ரமணன் உள்ளிட்ட சிலர் போலியான பெயர்களில் தங்களுக்குச்சொந்தமானதாக மாற்றி சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்குச் சென்று பத்திரம் எழுதியுள்ளனர் என்றும் பழனி தனதுபுகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீஸார் ரமணனைக் கைது செய்தனர். விசாரணையில் போலியானபெயர்களில் பழனியின் நிலத்தை தங்களது பெயருக்கு ரமணன் உள்ளிட்ட 5 பேர் பத்திரம் மாற்றி எழுதியது தெரியவந்தது.
இதையடுத்து ரமணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதிஉத்தரவிட்டார். ரமணனின் கூட்டாளிகளான அண்ணாமலை, மதியழகன் போன்றவர்கள் தலைமறைவாகிஇருக்கிறார்கள். அவர்களைப் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications