டான்சி வழக்கு: நாளை முக்கிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான முக்கிய வழக்காகக் கருதப்படும் டான்சி வழக்கு மீதான அப்பீல் மனுக்கள் நாளைசென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் என்றழைக்கப்படும் "டான்சி" என்ற நிறுவனம் தமிழக அரசுக்குச் சொந்தமானது.அந்த நிறுவனத்தின் நிலத்தை குறைந்த முத்திரைத் தாள் மதிப்பில் ஜெயலலிதா முன்பு முதல்வராக இருந்தபோதுவாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றும் அவர் மீதுபுகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மட்டுமல்லாமல், அவரது தோழி சசிகலா, டான்சி இயக்குநர் சீனிவாசன்,முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப், துணைக் கலெக்டர்(ஸ்டாம்ப்) நாகராஜன் மற்றும் முதல்வரின் துணைச்செயலாளர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதி மன்ற நீதிபதி அன்பழகன் இவர்கள் அனைவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதே போல மற்றொரு முக்கியமான வழக்கு கொடைக்காணல் பிளசண்ட் ஸ்டே வழக்கு. இந்த வழக்கில் சுற்றுலாத்தளமான கொடைக்காணலில் கட்டட விதிமுறைகளை மீறி அளவுகடந்த உயரத்துக்கு ஓட்டல் கட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கிலும், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிபாண்டே, தொழிலதிபர்கள் மித்தல் மற்றும் பாலை சண்முகம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபபதி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஒருஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனைகளால் தான் சமீபத்தில் நடந்த சட்டமள்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் ஜெயலலிதா மனுதாக்கல்செய்தும், ஒன்றில் கூட போட்டியிட முடியாமல் போனது.

பிறகு அவரது தலைமையில், அதிமுக பெரும் வெற்றி பெற்று ஜெயலலிதாவே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகாமல் இவர் 6 மாதங்களுக்குத்தான் முதல்வராக நீடிக்க முடியும்.

அதற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுவிட வேண்டும். அதற்குள் தான் குற்றமற்றவர் என்றுநிரூபித்த பிறகுதான், அவர் தேர்தலில் நிற்கவே முடியும்.

இந்த 2 வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல்மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல இந்த 2 வழக்குகளிலும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்தும் ஆதரித்தும், மொத்தம் 17 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் நாளை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. அரசு சார்பில் வக்கீல்வெங்கடபதியும், முதல்வர் சார்பில் வக்கீல் ஜோதியும் ஆஜராக உள்ளனர்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பை வைத்துத்தான் ஜெயலலிதா தமிழக முதல்வராக நீடிக்கமுடியுமா, முடியாதா என்று தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+