நடிகர் விஜயகாந்துக்கு "சிறந்த இந்திய குடிமகன்" விருது
டெல்லி:
நடிகர் விஜயகாந்துக்கு "சிறந்த இந்திய குடிமகன் விருது" நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் வழங்கப்பட்டது.
தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் குஜராத் பூகம்பம், ஒரிஸ்ஸா புயல் என்று தேசிய அளவிலும் அவர் செய்துவரும் உதவிகள் ஏராளம். அவரது சேவை மனப்பான்மைக்கும், உதவும் குணத்திற்கும் மத்திய அரசின் அங்கீகாரம்இப்போது கிடைத்துள்ளது.
சிறந்த சேவை செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) டெல்லியில்நடைபெற்றது.
விழாவில் பல துறைகளிலும் சிறந்த சேவை செய்து வரும் தலைவர்கள், கலைஞர்கள், மதத்தலைவர்கள் எனஅனைத்துத் துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ஐ.நா.சபையின் மனித உரிமைகள்கமிஷன் தலைவர் நீதிபதி பி.என்.பகவதி வழங்கினார்.
தமிழ்த் திரைப்பட டைரக்டர் கதிர், இந்தி நடிகை மாதுரி தீட்சித், இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆகியோர்திரப்ைபடத்துறையில் செய்த சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் முரளி மனோகர் ஜோஷிக்கு "சிறந்த பாராளுமன்றவாதி" விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜயகாந்தின் பொது சேவைக்காக "சிறந்த இந்திய குடிமகன்" விருதுவழங்கப்பட்டது. பிறகு, நடிகர் விஜயகாந்துக்கு "டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்" சார்பில் பாராட்டுவிழா நடந்தது.
விழாவில் பேசிய விஜயகாந்த், "தமிழ் தவிர வேறு மொழி எனக்குத் தெரியாது. இந்நிலையில் டெல்லியில் எப்படிச்சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்ததது. இங்கு நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வோடு ஒரு தமிழனைவரவேற்று உபசரித்ததைக் கண்டு மணம் நெகிழ்ந்து போனேன்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications