பென்னாகரம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வீச்சு - 21 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்டதால் 21 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள நெருப்பூரில் கடந்த 2 நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருநத்து. இதற்கு மற்றொரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது. இதையடுத்துநெருப்பூர் அரசு பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இசை நிகழச்சி இரவு நடந்து கொண்டிருந்து.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் மேடை மீது நாட்டு வெடிகுண்டுகளைவீசி எறிந்தனர். இந்த வெடிகுண்டு மேடைக்கு அருகே இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்து வெடித்தது.

இதில் மேடைக்கு எதிரே அமர்ந்து இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது வெடிச் சிதறல்கள்விழுந்தது. இதில் 4 பெண்கள் உள்ளிட்ட 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.2 பெண்கள்உள்ளிட்ட 7 பேர் தர்மபுரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாமிநாதன் (வயது 35), ஆனைக்கவுண்டன் (வயது 47), ரமேஷ்குமார் ( (வயது 20), முனுசாமி (வயது 38),முனுசாமி (வயது 45), சின்னப்பாப்பா (வயது 23), மாரக்கான் (வயது 38) ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சின்னப்பையன் (வயது 48) என்பவர் பென்னாகரம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.

தகவல் அறிந்த தர்மபுரி எஸ்.பி. அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, தங்கராஜ் (வயது 26), சேகர் (வயது 32), ஐயப்பன் (வயது 33), சேட்டு (வயது 27),கதிரேசன் (வயது 21) ஆகியோரை பென்னாகரம் இன்ஸ்பெக்டர் சின்னராஜ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

வெடிகுண்டு சம்பவம் நடந்த நெருப்பூர்தான், சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் சொந்த ஊர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+