பெரும் பரபரப்புடன் தொடங்கியது டான்சி விசாரணை
சென்னை:
டான்சி நில பேர ஊழல் தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கு விசாரணை மிகுந்த பரபரப்புடன்திங்கள்கிழமை தொடங்கியது.
அவரது கோரிக்கையை தலைமை நீதிபதி ஜெயின் ஏற்றுக் கொண்டார். இவர் கர்நாடக நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டுவிட்ட நிலையில் இந்தத் தீர்ப்பைக் கூறியது டான்சி வழக்கை மேலும் சூடேற்றியது.
இன்று மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த எல்லா மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடங்கியது. அதிமுகவினரும் திமுகவினரும் நிதிமன்றத்தில் நூற்றுக்கணக்கில் நுழைந்துவிட ஏதாவது ஏடாகூடம்ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர்.
சோதனைக்குப் பின்னர் தான் நீதிமன்றத்துக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். எல்லோரையும்நீதிமன்றத்துக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பான வழக்கு விசாரணை காலை தொடங்கி உணவு இடைவேளைக்குப் பின்னரும் தொடர்ந்துநடந்தது. இனி தினமும் இந்த விசாரணை நடக்கும் எனவும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்று நடந்த வழக்கு விசாரணை விவரம்:
டான்சி வழக்கில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு நிர்ணயித்த விலைக்கே டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவாங்கினார் என்று உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.
நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு இந்த அப்பீல் மனு வந்தபோது, அரசுத் தரப்பு வக்கீல்வெங்கடபதி எழுந்து, வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தனக்கு முழுமையாக வந்து சேரவில்லை. எனவேவழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி பாலசுப்ரமணியம் ஏற்க மறுத்தார். திங்கள்கிழமை மாலைக்குள் அனைத்துஆவணங்களையும் வக்கீல் வெங்கடபதிக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, எந்தக் காரணத்தைக் கொண்டும்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது. தொடர்ந்து நடக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜராகும் வக்கீல் வேணுகோபால் எழுந்து, ஜெயலலிதா தரப்பு வாதத்தைஎடுத்து வைத்தார்.
அவர் கூறுகையில், "அரசு நிர்ணயிக்கப்பட்ட குழு ஒன்று பரிந்துரைத்த விலைக்கே எனது கட்சிக்காரர் டான்சிநிலத்தை வாங்கினார். அரசு நிர்ணயித்த விலை ஒரு கிரவுண்ட்டிற்கு ரூ.3,12,000 ஆகும்.
எனவே இதில் எந்த விதிமீறலும், ஊழலும் நடைபெறவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.எனவே எனது கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றுவாதாடினார்.
பின்னர் வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் விசாரணை தொடர்ந்து நடந்தது.
விசாரணை நாளையும் தொடர்ந்து நடக்கும் என நீதிபதி பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications