விஸ்வரூபம் எடுக்கிறது காவிரி பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்தில் பயிர்செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் பிழைக்குமா? என்ற பெரும் கேள்விக்குறிஎழுந்துள்ளது.

வெகுகாலமாக தீர்க்க முடியாமல் இருந்து வரும் பிரச்சனை காவிரி நீர் பிரச்சனை. இந்தபிரச்சனையை தீர்ப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் காவிரி நதி நீர் ஆணையநடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி கர்நாடக அரசு ஜூன் மாதம்10.26 டி.எம்.சி நீரும், ஜூலை மாதம் 42.76 டி.எம்.சி நீரும், ஆகஸ்டு மாதம் 54.73டி.எம்.சி நீரும், ஆண்டு முழுவதுமாக 205 டி.எம்.சி நீரும் தமிழகத்திற்கு திறந்து விடவேண்டும்.

இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடும் என்றநம்பிக்கையில் கடந்த ஜூன் மாதம் முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்துதண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 62.24 அடியாகஇருந்தது.

ஆனால் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரை வழங்கவில்லை. இதனால் பிரச்சனைஏற்பட்டது. கர்நாடக அரசு கபினி அணையிலிருந்து மிகக் குறைவான அளவு நீரேதிறந்துவிடப்பட்டது.

ஜூன் மாதம் முதல் தற்போது வரை கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு107.74 டி.எம்.சி. ஆனால் கர்நாடக அரசு வழங்கியிருப்பதோ 52 டி.எம்.சி. தான்.

காவிரிப் பாசனப்பகுதிகளிலும் போதிய மழை பெய்யவில்லை. மேட்டூர்அணையிலிருந்து நீரை திறந்துவிடுவதை நிறுத்தினால் பயிர்கள் பாதிக்கப்படும்.மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வெகுவாக குறைந்து 20 டி.எம்.சி என்ற அளவைதொட்டுவிட்டது. இருந்தாலும் மேடடூர் அணையிலிருந்து 15,800 கன அடி தண்ணீர்திறந்துவிடப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள நிலையின்படி தொடர்ந்து 1 வார காலம் நீர் திறந்து விடப்பட்டால்அணையே வற்றிப் போய்விடும்.

இந்த பிரச்சனையை தீர்க்க காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம்எழுதினார்.

ஆனால், மத்திய அரசு கொஞ்ச நாள் தூங்கிவிட்டு ஜெயலலிதா கொஞ்சம் கடுமையாககுற்றம் சாட்டிய பின்னர் தான் விழித்தது. காவிரி நதி நீர் ஆணைய கண்காணிப்பு குழுகூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் ஒரு வழியாய் அறிவித்தார்.

கர்நாடக அரசு அதிகாரிகளுடன், தமிழக அரசு அதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தைநடத்த அனுமதி தருமாறு கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கடிதம்எழுதினார்.

பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது கர்நாடக அரசு. ஆனால் ஜெயலிதாகுறிப்பிட்ட தேதிகளில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. பேச்சுவார்த்தைக்கானதேதியை பின்னர் அறிவிப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல்அறிவித்தார்.

இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எச்.கே.பாட்டீல்கூறுகையில். தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி தண்ணீர் திறந்துவிட முடியாது.இதுவரை இல்லாத அளவிற்கு கர்நாடகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் அதிக அளவு நீர் இருப்பு இல்லை. எனவேதமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது எங்கள் நிலை குறித்து காவிரி நதிநீர்ஆணைய கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்றார்.

இதன் காரணமாக காவிரி நீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகம் மனதுவைக்காவிட்டால் வருண பகவான் தான் மனது வைக்க வேண்டும்.

யார் மனது வைக்கப் போகிறார்கள்? கிருஷ்ணாவா? வருணபகவானா?

கவலையுடன் காத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+