ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் மாறனுக்கு தொடர்பில்லை: மத்திய அரசு
சென்னை:
சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு அழைத்ததில் அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோருக்கு எந்தப் பங்கும் இல்லை எனமத்திய அரசு கூறியுள்ளது.
உடனடியாக மத்திய அரசுப் பணிக்கு வரவும் என்ற பேக்ஸ் செய்தியை மட்டும் மத்திய அரசு அனுப்பியதையும்,கருணாநிதியைக் கைது செய்யச் சென்றபோது மாறன், பாலு ஆகியோர் போலீசாரைத் தாக்கியதையும் இந்தஅதிகாரிகள் தங்கள் வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களது வழக்கை தீர்ப்பாயத்தின் துணைத் தலைவரும் நீதிபதியுமான சுப்பிரமணியம், தீர்ப்பாயத்தின்உறுப்பினர் பாபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த 3 அதிகாரிகளின் மனுவை விசாரித்த தீர்ப்பாயம்மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசு பதில் மனு:
இதையடுத்து மத்திய அரசு இப்போது நோட்டீசுக்கு விளக்கமளித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்கூறப்பட்டுள்ள விவரம்:
மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோரின் தூண்டுதலால் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குமாற்றக் கோரவில்லை. இந்த மூன்று அதிகாரிகளின் தேவை மத்திய அரசுப் பணிக்குத் தேவைப்படுகிறது.
இவர்களின் அனுபவம், திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் இந்த அதிகாரிகளை மிக முக்கியமானபொறுப்பில் உட்கார வைக்க விரும்பினோம். இதனால் தான் அவர்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பச்சொன்னோம்.
வெறும் பேக்ஸ் செய்தி அனுப்பி இந்த அதிகாரிகளை உடனே மத்திய அரசுப் பணிக்கு அனுப்பச் சொல்லவில்லை.அதில் தகவல் மட்டும் தான் தரப்பட்டது. இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணியில் வந்து சேருமாறு இன்னும்ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.
பேக்ஸ் மூலம் மாநில அரசுக்கு மத்திய அரசு தகவல் மட்டும் தான் அனுப்பியது. இதில் எந்தத் தவறும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேரம் கேட்கும் மாறன்:
இதற்கிடையே மாறனும், பாலுவும் இந்த தீர்ப்பாயத்தில் ஒரு பதில் மனுத் தாக்கல் செய்தனர். அதில் தீர்ப்பாயம்கூறியபடி விளக்கம் தர மேலும் கால அவகாசம் தேவை எனக் கோரியிருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications