தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை மையம் இன்பத் தகவல்
News
-Staff
By Staff
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்குள் (புதன்கிழமைக்குள்) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை., வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு,நீலகிரி, பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் பலத்த மழை பெய்யலாம் என வானிலைஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. காட்டுமன்னார் கோவிலில் தான் அதிகபட்சமாக 7 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.