ஆப்கானிஸ்தானில் லகான் கிரிக்கெட்

Subscribe to Oneindia Tamil

இடம்: காபூல்- ஆப்கானிஸ்தானில் ஒரு பிரிவினரின் தலைநகர்

கிழிந்து போன அழுக்கு சட்டை, ஜிப்பா மாதிரி இறுக்கிக் கட்டப்பட்ட பேண்ட். தலையில் கிரிக்கெட்ஹெல்மட்டுக்கு பதில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் இரும்புத் தொப்பி. புழுதி படிந்த அந்த மண் பிரதேசம்.கையால் செதுக்கப்பட்ட வளைந்து நெளிந்த கிரிக்கெட் பேட். ரப்பர் பந்து. கிட்டத்தட்டலகான் படத்தில் வரும்கிராமத்தையும் அந்தக் கிரிக்கெட் குழுவையும் தான் நினைவூட்டுகிறது அந்த இடத்தின் சூழ்நிலை.

22 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்று ரஷ்யாவிடம் சிக்கி, இப்போது மதவாதிகளிடம் சிக்கிசின்னாபின்னாமாகி வரும் நாடு.

சினிமாவுக்குத் தடை, டிவிக்குத் தடை, புத்தகங்களுக்குத் தடை, பெண்கள் வெளியே வரத் தடை என ரிவர்ஸ்கியரில் கி.மு. வை நோக்கி ரொம்ப வேகமாய் பாகிஸ்தான் உதவியுடன் ஓடிக் கொண்டிருக்கும் யுத்த பூமி.

பழமைவாதம், வறுமை, வறட்சி, போர், பஞ்சம், பட்டினி என உயிரிழந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில்இளைஞர்களுக்கு ஒரே ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது கிரிக்கெட். இந்த நாட்டுக்கு கிரிக்கெட் புதிதல்ல.ஆனால், இந்த விளையாட்டு அங்கே இதுவரை மதிக்கப்பட்டதில்லை. ஆனால், வேறு பொழுதுபோக்கே இல்லைஎன்ற நிலையில் இப்போது கிரிக்கெட்டுக்கு தனி கிரேஸ் உருவாக ஆரம்பித்திருக்கிறது.

சமீபத்தில் மாகாண அளவில் கிரிக்கெட் போட்டி கூட நடத்தப்பட்டிருக்கிறது. கோஷ்ட் என்ற இடத்திலிருந்துவந்திருந்த ஒரு குழு தான் அனைவரையும் கவர்ந்தது. காரணம் இவர்களை தூரத்திலிருந்து பார்த்தால் வெள்ளைபேண்ட், வெள்ளை சட்டையில் மிக கவர்ச்சியாகத் தெரிந்தது தான்.

ஆனால், கொஞ்சம் பக்கத்தில் போன பின்னர் தான் தெரிந்தது. அது வெள்ளைக் கலர் இல்லை. மங்கிப் போனசிமெண்ட் நிற ஆடைகள். சட்டைகளில் பட்டன் பிய்ந்துபோய் பார்க்கவே பரிதாபமாக இருந்தார்கள். விசாரித்தால்இவர்கள் தான் ஆப்கானில் உள்ள தலைசிறந்த கிரிக்கெட் டீம் என்றார்கள்.

அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பிட்சையும், கிரவுண்டையும் பார்த்தால் அதைவிடப் பரிதாபம். கேட்ச்பிடிக்கிறேன் என்று யாராவது முயன்று விழுந்தாலோ, பவுண்டரி செல்லும் பந்தைத் தடுத்து நிறுத்துகிறேன் என்றுசறுக்க முற்பட்டாலோ அவர் கதி ரத்தக் களரிதான்.

அந்தளவுக்கு பாறைகளும், பள்ளங்களும் நிறைந்த ஒரு ஏரியாதான் அவர்களின் கிரிக்கெட் கிரவுண்டு.

ஆப்கான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அல்லாதத் நூரியிடம் இது பற்றிக் கேட்டதற்கு அவர் கூறியதாவது, எங்கள்இளைஞர்களில் பலருக்கு கிரிக்கெட் விளையாட ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கு வசதிகள் செய்துதர எங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்றார்.

இவர்களில் பல இளைஞர்கள் பாகிஸ்தானின் இம்ரான்கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களின்வீரசாகசங்களைப் பார்த்துவிட்ட ஆர்வத்தில் கிரிக்கெட்டை நாமும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இதில்இறங்கியிருக்கிறார்கள்.

டெண்டுல்கரும் அவர்களின் ஹீரோதான்.

கோஸ்ட் டீமின் மீடியம் பேஸ் பெளலர் ஜர்மா கான் என்பவர் கூறியதாவது, நாங்கள் பாகிஸ்தானைப் பார்த்துகிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர் என்று என் குடும்பத்தினருக்குத்தெரியும். ஆனால், என் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு , அதாவது ஒரு நல்ல யூனிபார்ம் வாங்கித் தரும்அளவுக்குக் கூட என் குடும்பத்தில் வசதி இல்லை. எங்கள் தேவைகள் தான் அதிகமாக உள்ளது என்றார்.

மேலும் , என்றாவது ஒருநாள் நாங்களும் சர்வதேச மேட்ச்களில் விளையாடுவோம் என்றார் ஏக்கத்துடன்.

ஏக்கத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லை நம்பிக்கையும் வெற்றியும்... அவர்கள் அதைத் தொட வாழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+