திமுக-பா.ஜ.க. மோதலுக்கு அடிபோடும் அதிமுக
சென்னை:
தமிழக அரசியலில் மங்காத்தா ஆட்டம் தொடங்கியிருக்கிறது.
இதே விளையாட்டை அரசியலில் பெரியவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுகவை எப்படியாவது வெளியேற்றிவிட்டு அங்கு போய் தான் சேர்ந்துவிடவேண்டும் என்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் ராசி இருப்பதாக அவரது ஆஸ்தான கேரள ஜோதிடர் கூறியிருப்பதால்எப்படியாவது முதலில் மத்தியக் கூட்டணியில் நுழைந்துவிடுவது என எல்லா வழிவகைகளையும் ஆராய்ந்துவருகிறது அதிமுக.
மத்திய அரசுடன் ஒரு பக்கம் மோதினாலும் கூட பணிந்து போகத் தயார் என்பதற்கான சிக்னல்களும் அவ்வப்போதுசில பிரண்ட்லி சேனல்கள் வழியாக வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கருணாநிதி கைது விவகாரத்தில் அதிமுக மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்மனக்கசப்புடன் தான் திமுக உட்கார்ந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சியாகிவிட்டதால் தன்னை மத்திய அரசு மதிக்கவில்லை என திமுக கருதுகிறது.
ஜெயலலிதாவின் அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் நீடிப்பது தான்பாதுகாப்பு எனக் கருதும் ஒரே காரணத்தினால் தான் கூட்டணியில் பல்லைக் கடித்துக் கொண்டு நீடிக்கிறது திமுக.
பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததால் மத்தியில் அமைச்சர் பதவி கிடைத்ததைத் தவிர திமுகவுக்கு தொடர்ந்து இழப்புதான் ஏற்பட்டு வந்திருப்பதாக அக் கட்சித் தொண்டர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருப்பதுதலைமையை எட்டியுள்ளது.
மத்திய அரசு மீது வெறுப்பு இருந்தாலும் வேறு வழியில்லை. கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்காகவேகாத்திருக்கும் அதிமுக ஒரே ஒரு ஜம்ப் அடித்து நேராக பா.ஜ.க. கூட்டணியில் போய் சேரும்.
அப்புறம் தமிழகத்தில் திமுக தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகிவிடும். இதனால் தனதுமன வருத்தங்களை எல்லாம் உள்ளேயே வைத்துக் கொண்டு அமைதி காக்கிறது திமுக.
இது மத்திய அரசுக்கும் தெரியும். ஆனால், திமுகவோ, அதிமுகவோ தங்களுக்கு வேண்டியது மெஜாரிட்டிஎம்.பிக்கள் ஆதரவு தான் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
வாஜ்பாயைத் திட்டித் தீர்த்துவிட்டு வெளியே போன மம்தா பானர்ஜியை வெத்திலை பாக்கு வைத்து உள்ளேகொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க.
முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுகவை விமர்சிக்கும் பா.ம.கவை முதலில் அன் அபீசியலாகவும் இப்போதுமுறைப்படியும் சேர்த்துக் கொண்டுவிட்டது பா.ஜ.க.
திமுக மிரட்டினால் அதிமுகவுடன் கைகோர்ப்பதில் பா.ஜ.கவுக்கு எந்தவிதமான சங்கடமும் இருக்காது.திமுகவைதூண்டிவிட்டு எப்படியாவது பா.ஜ.க.-திமுக மோதலை உருவாக்க வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறதுஅதிமுக.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இப்போதைக்கு பா.ஜ.கவை விட்டு விலகுவதில்லை என்ற முடிவில் இருக்கிறது திமுக.
நீ வெளியே வந்தா நான் உள்ளே... நான் வெளியே வராட்டி நீயும் வெளியே தான்... இது தான் தற்போதைய அதிமுக,திமுகவின் நிலை.
இதில், லாபம் என்னவோ பா.ஜ.கவுக்குத் தான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications