மின் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.4,000 கோடியில் திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 4,000 கோடியில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னையில் கடும் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதாகவும் த.மா.க. ஜனநாயகப் பேரவை(சிதம்பரம் கட்சி) எம்.எல்.ஏ. புரசைவாக்கம் ரங்கநாதன் சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில்,
சென்னையில் மொத்தம் 15 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு 13,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னையின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க ரூ. 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியைக்கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னயில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே மின் தட்டுப்பாட்டைப் போக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மாநிலமுழுவதும் புதிதாக 61 துணை மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அளவில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பொது மக்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்நடத்துவார்கள்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க மாநில அளவில் மிகப் பெரிய 3 திட்டங்கள்நிறைவேற்றப்படவுள்ளன. ரூ. 4,000 கோடி செலவில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையில் இத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுஎன்றார் ஜெயக்குமார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications