பேரணி வன்முறை: கருணாநிதி மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
திமுக பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின்ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
இந்த வன்முறையில் 6 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள்சேதமடைந்தன.
இந்த வன்முறைக்கு திமுகவே காரணம் என்று கூறி, செல்லப்பாண்டியன் என்பவர், பொது நல மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கூறப்பட்டதாவது:
திமுகவினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறை காரணமாக ரூ.35 லட்சத்திற்கும் மேலான பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது மட்டுமல்லாமல், 6 பேர் பலியாகியும் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கச் செய்து, அரசைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து ரவுடிகளை வரவழைத்து, இந்த வன்முறைச் சம்பவம் நடத்தப்பட்டது.
எனவே, இந்தப் பேரணியை நடத்திய கருணாநிதி, அன்பழகன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சிர்புர்கள், கனகராஜ் ஆகியோர் விசாரித்தனர். இதுபோன்ற வழக்கை உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யக் கூடாது என்றும் தனிப்பட்ட முறையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்தான் புகார் கொடுக்கலாம்என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
இதையடுத்து, இந்த மனு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து, நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications