சட்டசபையில் சட்டையைக் கழற்றி பா.ம.க. எம்எல்ஏ போராட்டம்
சென்னை:
சட்டசபையில் சட்டையைக் கழற்றி தமிழகத்தின் மானத்தை வாங்கினார் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.ஒருவர்.
அவர் பேசிய ஒரே நாளில் அக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையில் சட்டையைக் கழற்றிப்போட்டுவிட்டு அமளி செய்தார்.
அரை நிர்வாண கோலம் :
வந்தவாசி தொகுதியைச் சேர்ந்த முருகவேல் என்ற அந்த எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை சட்டசபை தொடங்கியவுடன் எழுந்தார். தனது சட்டைபட்டன்களை அவிழ்த்தார். பனியன் கூட போடாமல் இருந்த அவர் தனது அரை நிர்வாண பாடியைக் காட்டியவாறு எழுந்து நின்றார்.
தலைகுனிந்த பெண் எம்.எல்.ஏக்கள்:
இதைப் பார்த்த அனைத்து எம்.எல்.ஏக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பெண் எம்.எல்.ஏக்கள் தலை குனிந்துகொண்டனர்.
இந் நிலையில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி எழுந்து பேசினார். முருகவேலின் இந்தச் செயல் பெண்உறுப்பினர்களின் மனதை மிகவும் புண்படுத்துகிறது என்றார்.
சட்டையில்லாமல் நின்ற உறுப்பினரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சபாநாயகர் காளிமுத்து ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு பேசினார். ஏன் இப்படி சட்டையைக் கழற்றுகிறீர்கள். உங்கள் பிரச்சனை என்ன என்று பேசுங்கள் என்றார்.
இதையடுத்து அரை நிர்வாண நிலையிலேயே பேசிய முருகவேல், தாழ்த்தப்பட்ட மக்களான தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதைக் கண்டிக்கிறேன் என்றார்.
பின்னர் சட்டை போடாமல் இருக்கையில் அமர்ந்தார். கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்துவிட்டு என்னநினைத்தாரோ தெரியவில்லை, அவராகவே வெளியேறினார்.
நாளையும் சட்டை போடாமல் வருவேன்:
வெளியில் நிருபர்களிடம் பேசிய முருகவேல், இன்று சட்டசபையில் நீதித்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதுவிவாதம் நடக்கிறது. தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்துதாக்கப்பட்டு வருகின்றனர்.
தேவேந்திர குல மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இதைக் கண்டித்துத் தான் சட்டைஅணியாமல் போராட்டம் நடத்தினேன். தொடர்ந்து நாளையும் சட்டை அணியாமல் தான் சட்டசபைக்கு வருவேன்என்று பேசி அதிர்ச்சியூட்டினார்.
இதுல என்ன தப்பு?: பா.ம.க. தலைவர் கேள்வி:
இது தொடர்பாக பல எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். இதையடுத்துப் பேசிய பா.ம.க. கட்சித்தலைவர் ஜி.கே. மணி, எங்கள் கட்சி எம்.எல்.ஏ. சட்டையைக் கழற்றியதில் தவறு ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை. அப்படியே தவறு என்று சபாநாயகர் நினைத்தால், முருகவேலை மன்னித்துவிடலாம் என்றார்.
சட்டசபை கலங்கிப் போய் இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications