டான்சி நிலத்தை மாற்றி திமுக தில்லுமுல்லு: ஜெ. வக்கீல் வாதம்
சென்னை:
ஆலந்தூர் பகுதியில் ஜெயலலிதா வாங்கிய டான்சி நிலத்தை அடையாறு பகுதியில் வாங்கியாகக் காட்டி அதன்மூலம் நிலத்தின மதிப்பையும் அதிமாகக் காட்டி திமுக அரசு தில்லுமுல்லு செய்துள்ளது என நீதிமன்றத்தில்ஜெயலலிதாவின் வக்கீல் வாதாடினார்.
அப்பேது ஜெயலலிதா தரப்பு நியாயங்களை அவரது வக்கீல் வேணுகோபால் நீதிபதி பாலசுப்ரமணியம் முன்புஎடுத்து வைத்தார். அதன் விவரம் வருமாறு,
டான்சி நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவந்ததைக் கருத்தில் கொண்டு அதன் நிலத்தை விற்க 1981ம் ஆண்டேமுடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைடுத்து பல முறை டான்சி நிலத்தை விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல ஏலத்தொகைகிடைக்காததால் அதை விற்கவில்லை.
இதையடுத்து கடந்த 92ம் ஆண்டு அந்த நிலத்துக்கு ஒரு கிரவுண்டுக்கு ரூ. 3.50 லட்சம் என்று விலை நிர்ணயம்செய்யப்பட்டது.
இந்த டான்சி நிலம் உண்மையில் ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது. ஆலந்தூர் பகுதியில் உள்ள நிலங்களின்விலைமதிப்பு நிர்ணயிப்பது குறித்து சரியான வழிகாட்டி கிடையாது.
அதனால் கலெக்டர், தாசில்தார், நில நிர்வாக கமிஷனர் ஆகியோரின் ஆலோசனைப்படி கிரவுண்ட் ஒன்றுக்குரூ.3.01 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்த விலையை விட அதிகமாகக் கொடுத்துத்தான் ஜெயா பப்ளிகேசன்ஸ், மற்றும் சசி எண்டர்பிரைசஸ்நிறுவனங்கள் அந்த நிலத்தை வாங்கின. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி வரை லாபம் தான் ஏற்பட்டுள்ளது.
அடுத்து வந்த திமுக ஆட்சியில், சிறு தொழில்துறை செயலாளராக இருந்த சோசம்மா, இந்த டான்சி நிலம் விற்றதில்முறைகேடு நடந்துள்ளது என்று புகார் கொடுத்தார்.
அதில் உண்மையான விலை கிரவுண்டுக்கு 7.32 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்து. டான்சி நிலம் அடையாறுபகுதியில் இருப்பதாகக் காட்டப்பட்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் அது ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தது என்பதும் அதற்கு அதிகாரிகளின் விலை நிர்ணயம் 3.01 லட்சம்என்பதும் இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டர், தாசில்தார் ஆகிய அதிகாரிகளின் விலை மதிப்பீட்டைப் பற்றி, இது பற்றி வழக்குத்தொடரப்பட்ட பின்பு கோர்ட்டில் சொல்லாமல் மறைத்துவிட்ட காரணத்தால் நீதி தவறிவிட்டது.
ஒரு அரசியல் எதிரியைத் தண்டிக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத் தோடு இந்த வழக்குபோடப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.
உண்மையில் இந்த நிலம் விற்பனையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசுக்கு நஷ்டமும் ஏற்படவில்லை.வழக்குதான் அரசியல் உள்நோக்கத் தோடு போடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவின் வக்கீல்வேணுகோபால் வாதாடினார்.












Click it and Unblock the Notifications