தேர்தல் கமிஷன் மீது அனைத்துக் கட்சியினர் சரமாரி புகார்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 72,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கிய தேர்தல் கமிஷன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் கோரிக்கை விடுத்தனர்.
தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே, வாக்காளர் பட்டியலைத் தேர்தல் கமிஷன் தயாரிக்க ஆரம்பித்தபோதிலும், ஏதோ அவசரக் கோலத்தில் தயாரிக்கப்பட்டதைப் போலத்தான் வாக்காளர் பட்டியல்கள் இருந்தன.
இந்தத் தேர்தலில், சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன என்று தேர்தல் சமயத்திலேயேஅரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனைச் சாடிக் கொண்டிருந்தன. தங்களுடைய வாக்குரிமையைக் கூடச் செலுத்தமுடியாத வாக்காளர்களும் தேர்தல் கமிஷனை வசைபாடித் தீர்த்தன.
நாட்டிலேயே நேர்மையான நிர்வாகம் கொண்டிருப்பதாகக் கருதப்படும் தேர்தல் கமிஷனிடமே இவ்வளவுகோளாறுகளா என்று பொதுமக்கள் ஆத்திரப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையில் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.
இந்த விஷயத்தில், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒட்டு மொத்தமாக தேர்தல் கமிஷனுக்குஎதிராகக் குரல் கொடுத்தனர். வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த தேர்தல் கமிஷன்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினார்கள்.
இந்தப் பிரச்சனையை முதன் முதலாகக் கிளப்பிய தமாகா எம்.எல்.ஏவான ஞானசேகரன், "72,000க்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பாகவே, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால் நல்லது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சட்டசபை திமுக தலைவர் அன்பழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவப்புண்ணியம்ஆகியோரும் ஞானசேகரனின் கருத்தை வலியுறுத்திப் பேசினர். வரும் உள்ளாட்சித் தேர்தலின்போது, புதியவாக்காளர் பட்டியல்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இவற்றுக்குப் பதிலளித்து சட்ட அமைச்சர் பொன்னையன் பேசுகையில்,
வாக்களர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணமான தேர்தல் கமிஷன் அதிகாரிகள்மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் இதுகுறித்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து துவங்கும் என்றுஏற்கனவே தேர்தல் கமிஷன் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது என்றார் பொன்னையன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications