முதல்வரின் "உள்ளே வெளியே" பேச்சு - கம்யூ. உறுப்பினர் பீதி
சென்னை :
"நாங்கள் தே.ஜ. கூட்டணியில் இணைகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுக தே.ஜ.கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படும்" என்று முதல்வர் சட்டசபையில் பேசியது தங்களுக்கு அச்சத்தைஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூ. உறுப்பினர் கூறினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதீய ஜனதா உறுப்பினர் லட்சுமணன் பேசும் போது, அதிமுக பா.ஜ. கூட்டணியில்சேருவதற்கு சிக்னல் கிடைத்துவிட்டது என்பது போல பேசினார்.
இதையடுத்து திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசும்போது, நாங்கள் கூட்டணியை விட்டு விலகினால், அதிமுகஅதில் சேராது என்று சத்தியம் செய்து தர முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதாக ஒரு வார்த்தை கூறினால்போதும், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்றார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஒரு பேட்டியின் போது, மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி,தே.ஜ.கூட்டணியில் சேர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை என்றார்.
இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழக மக்கள் மதச்சார்பற்ற கூட்டணி மீதும், நமது முதல்வர் மீதும்வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
இவர்கள் குறிப்பிட்ட சிக்னல் மதசார்பற்ற கூட்டணிக்கு "பச்சையாக" தெரிந்திருக்கலாம். ஆனால் அது எங்களுக்கு"சிவப்பாக" மாறிவிடுமோ என்ற பீதி எழுந்துள்ளது என்றார். இதைக் கேட்டு முதல்வர் உட்பட சபையில்அனைவரும் சிரித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications