வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த போலீஸ்
கோயம்புத்தூர்:
வழக்கமாக கொள்ளையர்கள் வந்து கொள்ளை அடித்து விட்டுப் போன பின்னர் தான் சினிமாவில் வருவது மாதிரி கடைசியில்தான் போலீசார் அரக்கப் பரக்க ஓடி வருவார்கள்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் ஒரு வீட்டினர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனால் அந்த வீடு சில நாட்களாகபூட்டிக் கிடந்தது. இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை அந்த வீட்டைக் கொள்ளையடிக்கத்திட்டமிட்டனர்.
5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் காலை 3.30 மணிக்கு அந்த வீட்டின் வெண்டிலேட்டர் மூலமாக வீட்டுக்குள் புகுந்தது.
இதைக் கவனித்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்த போலீஸ் குழுவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான ரோந்துப் பணிபோலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர்.
நேராக கதவை உடைத்துக் கொண்டு போலீசார் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒவ்வொரு பொருளாக எடுத்து மூட்டைகளில்கட்டிக் கொண்டிருந்த கொள்ளைக் கும்பல் அதிர்ச்சியில் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால், போலீசார் அவர்களுடன்சண்டையிட்டனர். போலீஸ் தாக்குதலில் நிலை குலைந்த 4 கொள்ளையர்கள் உடனடியாக சரணடைந்துவிட்டனர்.
ஆனால் ஒரு கொள்ளையன் மட்டும் போலீசாரைத் தொடர்ந்து தாக்கினான். அவனை பலமுறை எச்சரித்த பின்னரும் தொடர்ந்துபோலீஸ் மீது தாக்குதல் நடத்தினான். இத் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் காயமைடந்தார். இவனிடம் பேசிப் பயனில்லைஎன்பதைத் தெரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் உடனே தனது துப்பாக்கியால் அவனைச் சுட்டார்.
இதில் அந்தக் கொள்ளையனின் இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவனை போலீசார் அவனை அடித்துஇழுத்துச் சென்றனர்.
இதற்குள் கூடுதல் போலீஸ் படையும் சம்பவ இடத்தில் குவிந்துவிட்டது. இந்த 5 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்துகொண்டு சென்றனர். காயமடைந்த கொள்ளையன் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். பிறர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் துணிச்சலான தாக்குதலையும் பக்கத்து வீட்டுக்காரரின் துரித நடவடிக்கையையும் அனைவரும் பாராட்டினர்.
கொள்ளையர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்த போலீஸ் குழுவுக்கு அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications