பள்ளியில் தூக்கில் தொங்கிய மாணவி: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டசம்பவம் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வளாகத்திலிருக்கும் ஒரு மரத்தில் ரேவதி தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் பள்ளி முன்பு குவிந்தனர்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி நகர உதவி போலீஸ் கண்காணிப்பாளர், வடபாகம்போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தூக்கில் தொங்கிய ரேவதியின் கால்கள் தரையை தொட்டு இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்றும்,போலீசார் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
போலீசார் ரேவதியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணை எதுவும் செய்யாமல் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததற்கு பொதுமக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்கள் நகர போலீஸ் கண்காணிப்பாளரை முற்றுகையிட்டனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மக்களை போலீசார் சமாதானம் செய்தனர்.1 மணி நேரம் அங்கு பதட்டம் நிலவியது. பின்னர் மக்கள் கலைந்துசென்றனர்.
ரேவதியின் சாவு குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேதபரிசோதனை முடிந்து பின்புதான் ரேவதியின் சாவு தற்கொலை தானா என்று தெரியவரும் என்று போலீசார்தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications