வரதட்சணை கொடுமைக்குப் பலியான கர்ப்பிணி
பண்ருட்டி:
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை உயிருடன் தீ வைத்து கொலை செய்ததற்காக அவரது கணவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது, பண்ருட்டி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவர் அவரதுகணவராலேயே எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரிய எலந்தம்பட்டு ஹரிஜன காலனியில் வசித்து வருபவர்திருநாவுக்கரசு (வயது 28). இவருடைய மனைவி ஜானகி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம்ஆகிறது. ஜானகி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
திருமணத்தின் போது ஜானகியின் பெற்றோர் அவருக்கு 10 பவுன் நகை போட்டு, மாப்பிள்ளை திருநாவுக்கரசுக்குமோட்டார் சைக்கிளும் சீதனமாக அளித்தனர்.
திருநாவுக்கரசு தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து செலவு செய்துவிட்டார். அத்துடன் விடவில்லை.மேலும் ஜானகியை தாய் வீட்டில் சென்று பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சம்பவ தினத்தன்றும் கணவன்-மனைவி இடையே சண்டைநடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல் கருகிய நிலையில் ஜானகி கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானகி கடலூர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில்,வரதட்சணை கேட்டு, தன் கணவர்தான் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறினார். அதன் பின்சிகிச்சை பலனின்றி ஜானகி இறந்து போனார்.
இதையடுத்து, திருநாவுக்கரசு மீது காடாம்புலியூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். திருநாவுக்கரசு பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications