ஜெ.க்கு ஹரியானா முதல்வரும் ஆதரவு
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்ற தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் நிலைக்கு ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தன்னுடைய ஆதரவைத்தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் துணை கமிஷனர்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்தியப் பணியில் சேருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதற்காக, அந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் உடனே விடுவிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
தமிழக அரசு மறுப்பு - அனைத்து முதல்வர்களுக்கும் ஜெ. கடிதம்:
ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். மத்திய அரசு இதில்தலையிடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், அந்த 3 அதிகாரிகளையும் அனுப்ப முடியாது என்று மத்தியஅரசுக்குக் கடிதமும் எழுதிவிட்டது தமிழக அரசு.
மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அதே சூட்டோடு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. அதில், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் விஷயத்தில், தன்னுடைய நிலையை ஆதரித்துபிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
படிப்படியான ஆதரவு:
ஒரு சில நாட்களிலேயே இந்தக் கடிதத்துக்கு முதல் ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவின் ஆதரவைத் தெரிவித்தராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட், மத்திய அரசின் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து, பிரதமருக்குக்கடிதம் எழுதினார்.
கடந்த வாரம் மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து,பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும் தன்னுடைய ஆதரவைத் தமிழகத்திற்குத்தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன், சத்திஸ்கர் மாநில முதல்வர் அஜித் ஜோகியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் நடந்து கொண்டமத்திய அரசின் போக்கை அந்தக் கடிதத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் ஜோகி.
ஹரியானா முதல்வரின் ஆதரவு:
இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வரும் தற்போது தன்னுடைய ஆதரவை ஜெயலலிதாவுக்குத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓம் பிரகாஷ் சவுதாலா அனுப்பியுள்ளார்.அதன் மற்றொரு நகலை நிருபர்களிடமும் அவர் வெளியிட்டார்.
"எதிர்காலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமில்லாமல், பிற துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இதனால் பெரிதும்பாதிக்கப்படுவார்கள். தேசிய மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படும் அளவுக்கு இந்த விவகாரம்ரொம்பவும் சீரியஸாகத்தான் இருக்கிறது.
இந்த விவகாரத்தின் மூலம், மத்திய-மாநில அரசு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கு பிரதமர் வாஜ்பாய்முக்கியக் காரணமாகிவிட்டார்" என்று அந்தக் கடிதத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் சவுதாலா.
எல்லோரும் காங்கிரஸ்...
ஜெயலலிதாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்களில், ராஜஸ்தான் முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர் மற்றும்சத்திஸ்கர் முதல்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளமுதல்வரோ பாஜகவின் முக்கிய எதிரியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications