ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: ஜெ.க்கு மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை:
தமிழகத்திலிருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு, தமிழக அரசுக்கும் மீண்டும்மத்திய அரசு கடிதம் எழுதவுள்ளது.
மத்திய அமைச்சரவைப் பணிகளில் இவர்கள் சேர்வதற்கேற்ப, தமிழக அரசு இவர்களை விடுவிக்க வேண்டும் என்றுமத்திய அரசு விளக்கம் கூறியிருந்தது.
ஆனால், மாநில அரசின் அனுமதியில்லாமல், இந்த 3 அதிகாரிகளை அழைப்பதற்கு மத்திய அரசு எடுத்த முடிவைக்கடுமையாகக் கண்டித்தது தமிழக அரசு. மேலும், இந்த 3 அதிகாரிகளையும் அனுப்ப முடியாது என்றும் பதில்கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது.
சூட்டோடு சூடாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில், தமிழக அரசின் நிலையை ஆதரிக்குமாறும், மத்திய அரசைக்கண்டிக்குமாறும் கோரி அக்கடிதம் அனுப்பப் பட்டிருந்தது.
ராஜஸ்தான், பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், சத்திஸ்கர் மற்றும் ஹரியானா மாநில முதல்வர்கள், ஜெயலலிதாவுக்குஆதரவாக இதுவரை குரல் கொடுத்துள்ளனர். மாநில அரசின் விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசையும்அவர்கள் கடுமையாகச் சாடினார்கள்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு அனுப்பக் கோரி அடுத்த கடிதத்தை தமிழகஅரசுக்கு அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இந்தியப் போலீஸ் பணிகள் விதிமுறையின் அடிப்படையில், குறிப்பிட்ட அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்காகஅழைப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்றும், இவ்விஷயத்தில் மாநில அரசு மறுத்தாலும், தன்னுடையஅதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அந்த அதிகாரிகளை அழைக்க முடியும் என்றும் மத்திய அரசுநம்புகிறது.
இந்த நம்பிக்கையுடன்தான், மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதப் போவதாக உள்துறைஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications