நீதிபதி ஜெயினுக்கு எதிரான புகார் மனு தள்ளுபடி
சென்னை:
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கே.ஜெயின் பணிமாற்றத்திற்குப் பிறகும் தனது அலுவலகத்தில்தொடர்ந்ததன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டார் என்று கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் அவர் பதவியில் நீடித்ததை எதிர்த்து, வெங்கடசுப்பராஜூ மற்றும் செந்தில் குமார் ஆகியவக்கீல்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிசண்முகம் முன்பு நேற்று (செவ்வாய்கிழமை) வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி சண்முகம் தனது தீர்ப்பில்கூறியிருப்பதாவது:
ஒரு நீதிபதி பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு உடனடியாக தனது அலுவலகத்தைக் காலிசெய்ய வேண்டும் என்றுசட்டத்தில் கூறப்படவில்லை. நீதிபதிகள் பணிமாற்றம் குறித்த விதிகள் அடங்கிய சட்டப்பிரிவுகளான 216, 217மற்றும் 223 ஆகியவற்றின் சாரம்சத்தில் இவ்வாறு எதுவும் குறிப்பிடப்பவில்லை.
பணிமாற்றம் செய்யப்பட்ட உடனேயே, ஏற்கனவே அவர் பணியில் இருக்கும் இடத்தில் அவருடைய அதிகாரம்முடிந்துவிடாது.
பணிமாற்றம் செய்யப்பட்டவர் அவரது அடுத்த பணிஇடத்தில் பொருப்புகளை ஏற்கும் வரையிலோ அல்லதுஏற்கனவே உள்ள இடத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதியிடம் பொறுப்புகளை ஏற்கும்வரையிலோ அவர் பதவியில் நீடிக்கலாம்.
ஆனால் உயர் பதவியில் இருப்பவர்கள் பதவியின் கண்ணியம், கவுரவம் கருதி எவ்வளவு சீக்கிரம் தனதுஅலுவலகத்தைக் காலி செய்ய வேண்டுமோ அதை செய்வது தான் நியாயம்.
அவர் முக்கியமான பிரச்சனைகளை அணுகாமல் இருப்பதும் அவரது கண்ணியத்தின் அடையாளமாக இருக்கும்.மற்றபடி பணிமாற்றம் செய்யப்பட்டவர் தனது அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றியதில் எந்த சட்ட மீறலும்இல்லை.
எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications