இலங்கை: ஆளுங்கட்சி-எதிர்கட்சி பேச்சுவார்த்தை தோல்வி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சியினர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இலங்கையில் சமீப காலமாக நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சந்திரிகா அரசில்அமைச்சர்களாக இருக்கும் 6 பேரும், முக்கிய எதிர்கட்சியான யு.என்.பியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதில் 2 கட்சிகளும் இணைந்து கூட்டாட்சி முறையில் ஆட்சி செய்ய முயன்று வந்தன. ஆனால் இந்தப்பேச்சுவார்த்தை எந்த ஒப்பந்தமும் செய்யப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் மற்றும் எதிர்கட்சி எம்.பி.சோக்சிஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தங்களும் செய்யப்படாமல்இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது என்று அறிவித்தனர்.

இதுகுறித்து யு.என்.பி. துணைத் தலைவர் காமினி அதுகோரல்லே கூறும்போது, நாங்கள் பாராளுமன்றத்தில்மோதியோ அல்லது மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தியோதான் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைச்சரிசெய்யமுடியும் என்றார்.

மேலும் ஆளுங்கட்சியினர் தான் பேச்சுவார்த்தையின் போது கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கமறுத்தனர் என்றார்.

ஆனால் யு.என்.பி. தரப்பில் அதன் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவைப் பிரதமராக நியமிக்க கோரினர். மேலும்அவர் தலைமையில் 1 ஆண்டுக்கு இடைக்கால அரசு நடக்க வேண்டும். அப்போது அனைத்து அமைச்சர்களையும்,அவர்களின் துறைகளையும் அவரே தேர்ந்தெடுப்பார். அந்தந்தத் துறைகளுக்கான அதிகாரிகளையும் அவர்தான்தேர்வு செய்வார் என்றும் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை ஆளும மக்கள் கூட்டணியினர் ஏற்க மறுத்தார்கள். மேலும் தற்போது பிரதமராக இருக்கும் ரத்னசிரிவிக்கிரமநாயகேவை துணை அதிபராக நியமிக்கவும் கோரினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதையு.என்.பி.ஏற்கவில்லை.

மேலும் யு.என்.பியினர் கூறிய முடிவுக்கு ஆளுங்கட்சி ஒத்துக்கொள்ள மறுத்தால் பாராளுமன்றத்தைக் கூட்டிநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுயதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் எதிர்கட்சி ஆதரவு உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் அனுரா பண்டார நாயகேவை அனுகிபாராளுமன்றத்தை திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி கூட்ட வேண்டும் என்று வற்புறுத்திவ வருகிறார்கள்.

ஆனால் அது திட்டமிட்டபடி வரும் 7 ம் தேதி கூடுமா என்பது சந்தேகமே. அப்படித் தொடங்கப்பட்டாலும், அதிபர்சந்திரிகா அதை மேலும் அக்டோபர் வரை ஒத்திவைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் வரை இழுத்துவிட்டால் ஆட்சி தொடங்கி ஒரு வருடம் முடிந்து விடும். பிறகு பாராளுமன்றத்தைக்கலைத்து விட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிட சட்டச் சிக்கல் இருக்காது என்று திட்டமிட்டிருப்பதாகவும்கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் நாடு விரைவில் இன்னொரு தேர்தலை சந்திப்பதுதவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+