சட்டசபை: முதல் முறையாக பாமக வெளிநடப்பு
சென்னை:
செவ்வாய்க்கிழமை அதிமுக-பாமக கட்சிகளுக்கிடையே சட்டசபையில் நடந்த பலத்த மோதலையடுத்து, முதல்முறையாக பாமகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பாமக உறுப்பினர் சிவகாமி வின்சென்ட், "டாக்டர் ராமதாஸ் யாரைச் சொல்கிறாரோ அவர்தான் முதல்வராகவருவார்" என்று கூறினார்.
உடனே எழுந்த வளர்மதி, "திண்டிவனத்தில் திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டு, அநாதையாகத்திரிந்தவர்களை டெல்லிக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றவர் முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரைமுதல்வராக்கியது தாங்கள்தான் என்று கூறுகிறார்கள். கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவர்களுக்கு புத்திகெட்டுப் போய் விடாது" என்றார்.
இதையடுத்து அதிமுகவினருக்கும் பாமகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், சட்டசபை பாமக தலைவர் ஜி.கே. மணி எழுந்து, "கூட்டணியில் இருந்து விலகிய போதிலும், அதிமுகதலைவர் பற்றி சட்டசபையில் நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
ஆனால் அமைச்சர் வளர்மதி, எங்கள் தலைவரைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். இது நல்லதல்ல.நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவையும் இனி நல்லவையாகவே இருக்கட்டும்" என்று கூறினார்.
மேலும் மணி பேசுகையில், "டாக்டர் ராமதாஸ் அநாதையாகத் திரிந்தார் என்றும் கேழ்வரகில் இருந்து நெய்வடிகிறது என்றும் அமைச்சர் வளர்மதி கூறிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றுவலியுறுத்தினார். பாமகவினரும் இதை ஆமோதித்துக் குரல் எழுப்பினார்கள்.
அவர்களுடைய வேண்டுகோளை ஏற்பதற்கு சபாநாயகர் காளிமுத்து மறுத்ததையடுத்து, பாமகவினர் அனைவரும்வெளிநடப்பு செய்தனர்.
கடந்த மே மாதம் அதிமுக அரசு பதவியேற்றதையடுத்து, இப்போதுதான் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications