சுதாகரன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் மனு
சென்னை:
போதை பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுதாகரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரி போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் பின் போலீசார் அவர் வீட்டை சோதனை செய்த போது அவர் வீட்டில் 16 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததாக கூறி போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
மேலும் அபிராமபுரத்தில் இருக்கும் சுதாகரனின் அலுவலகத்தை சோதனை செய்த போது அங்கு 72 கிராம் உள்ளஹெராயின் இருந்ததாகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த இரு வழக்கிலிருந்தும் சுதாகரனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சென்னையிலுள்ள போதைப் பொருள்தடுப்பு சட்ட வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் சுதாகரன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் விசாரித்தார்.
போதை பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் சரியான விதிமுறைகளைகடைபிடிக்கவில்லை என்று கூறி சுதாகரனை ஜாமீனில் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
தற்போது சுதாகரனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பாண்டிபஜார் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை விசாரிக்கும் நீதிமன்றம் சரியாக ஆராயமல் சுதாகரனுக்கு ஜாமீன்வழங்கியுள்ளது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொய்தீனின் ஜாமீன் உத்தரவையும்ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் தங்கள் மனுவில் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (புதன்கிழமை ) நடைபெற உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications