ஜெயலலிதா குற்றமற்றவர்- டான்சி வழக்கில் வழக்கறிஞர் வாதம்
சென்னை:
டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதா வாங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றுஜெயலலிதாவின் வக்கீல் வேணுகோபால் நேற்று உயர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
தனிநீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கை நீதிபதி அன்பழகன் விசாரித்து ஜெயலலிதா மற்றும் இந்த வழக்கில்சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதனால் ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து தனக்குவழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
டான்சி வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு ஆகிய 2 வழக்குகளிலும் மொத்தம் 17 அப்பீல் மனுக்கள்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 17 அப்பீல் மனுக்களின் மீதும் கடந்த திங்கள்கிழமை முதல்நீதிபதி பாலசுப்ரமணியம் முன்பு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை ஜெயலலிதா தரப்பு வாதங்கள்முடிவடைந்துள்ளன. இன்று (புதன்கிழமை) முதல் சசிகலா தரப்பு வக்கீல் தனது வாதத்தை நீதிபதி முன் எடுத்துக்கூறுகிறார்.
இதில் ஜெயலலிதா சார்பில் அவரது வக்கீல் வேணுகோபால் ஆஜராகி வாதாடினார்.
அவர் தனது வாதத்தில் கூறியதாவது,
டான்சி நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவந்ததைக் கருத்தில் கொண்டு அதன் நிலத்தை விற்க 1981ம் ஆண்டேமுடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைடுத்து பல முறை டான்சி நிலத்தை விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல ஏலத்தொகைகிடைக்காததால் அதை விற்கவில்லை.
இதையடுத்து கடந்த 92ம் ஆண்டு அந்த நிலத்துக்கு ஒரு கிரவுண்டுக்கு ரூ. 3.50 லட்சம் என்று விலை நிர்ணயம்செய்யப்பட்டது. இந்த நிலம் ஆலந்தூர் பகுதியில் உள்ளது.
ஆனால், திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் நிலத்தின் விலை கிரவுண்டுக்கு 7.32 லட்சம் என்றுநிர்ணயிக்கப்பட்து. நிலம் அடையாறு பகுதியில் இருப்பதாகக் காட்டப்பட்டு இந்த விலையைக் காட்டினார்கள்.
ஒரு நிலத்தை விற்கும் போது 33 முதல் 60 சதவீதம் வரை அபிவிருத்திக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்யலாம் என்றுசட்டம் கூறுகிறது. அவ்வாறு ஒரு கிரவுண்டின் விலை 7.32 லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும், 60 சதம்அபிவிருத்திக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தால் அந்த நிலத்தின் விலை 3 லட்சம் ரூபாய் தான்.
அதே நேரத்தில் நிலம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தது என்பதும் அதற்கு அதிகாரிகளின் விலை நிர்ணயம் 3.01லட்சம் என்பதும் திமுக ஆட்சியில் வேண்டுமென்றே இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டர், தாசில்தார் ஆகிய அதிகாரிகளின் விலை மதிப்பீட்டைப் பற்றி, வழக்குத் தொடரப்பட்ட பின்புகோர்ட்டில் சொல்லாமல் மறைத்துவிட்ட காரணத்தால் நீதி தவறிவிட்டது.
மேலும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்த பொறியாளர், டான்சி நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பீட்டைநிர்ணயித்துள்ளார். ஒரு பொறியாளர் அந்த நிலத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் மதிப்பை மட்டும் தான் மதிப்பீடுசெய்ய முடியும். நிலத்திற்கு மதிப்பீடு தர அவரால் முடியாது. அதுவும், அவர் வழக்கு விசாரணை தொடங்கியபின்னர் தான் வழிகாட்டி மதிப்பீடை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் அதற்கான முன் அனுபவமே இல்லாதவர்அந்தப் பொறியாளர்.
இந்நிலையில் அந்தப் பொறியாளரை கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி போலீசார் விசாரித்தபோதுதன்னிடம் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லை என்று முதலில் கூறியுள்ளார். ஆனால், பிறகு புலனாய்வுப்போலீசார் விசாரிக்கும் போது தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் கடந்த 1996ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 30 ம் தேதி தான் அந்த ஆவணங்கள் தன்னிடம் வந்ததாகக் கூறினாராம்.
(அப்போது நீதிபதி பாலசுப்ரமணியம் குறிக்கிட்டு , அரசு வக்கீலைப் பார்த்து இந்த விபரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளும்படி கூறினார்).
இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, மேலும் நம்பகத்தன்மை இல்லாதவை. இந்தப்பொறியாளரின் அறிக்கை 50 பக்கங்கள் உள்ளன. ஆனால் இவை ஏன் தனிநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்வில்லை.அதில் எந்த அதிகாரியின் கையொப்பமும் இல்லை.
டான்சி நிலம் முழுமையாக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிறுவனம். இதைவைத்து அதை ஒரு அரசு நிறுவனமாகக்கருத முடியாது.
இந்த நிலத்தை ஜெயலலிதா வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மேலும் அலர் இதைக் குறைந்தவிலைக்கு வாங்கி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை.
எனவே ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என்வாதத்தை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு வக்கீல் வேணுகோபால் ஜெயலலிதா தரப்பு வாதங்களை நீதிபதியின் முன்பு வைத்தார்.












Click it and Unblock the Notifications