10 ரூபாயில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும் ரூ.10செலுத்தி எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள முடியும்.மேலும் இது குறித்து ஆலோசனைகளும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறைஅமைச்சர் செம்மலை தெரிவித்தார்.
அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செம்மலை கூறியதாவது,
தமிழகத்தில் பால்வினை நோய்கள் பரவிவருவதைத் தடுக்க அரசு சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறது. எய்ட்ஸ்நோய் இருக்கிறதா என்று கண்டறிய ரூ.1.02 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 300 பால்வினை நோய்பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்.
பெண் சிசுக் கொலை மற்றும் பெண் சித்திரவதைகளைத் தடுக்க சேலம், தர்மபுரி, மதுரை மற்றும் தேனிமாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தனித் தொலைபேசி வசதிகள் செய்து தர அரசுமுடிவெடுத்துள்ளது.
மேலும் ரூ.190 லட்சம் செலவில் 10 முதல் 17 வயது வரையிலான பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள்வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக ரூ.10 கட்டணத்தில் அந்தப்பரிசோதனைணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் வசதிகள்ஏற்படுத்தப்படும். இதில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்று இலவச ஆலோசனைகளும் வழங்கஉள்ளன.
இதற்காக கருவிகள் வாங்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 6 கோடி செலவில் மருத்துவப் பணிகள் கழகத்திற்கு 6 மருந்து கிடங்குகள் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications