ஜெயலலிதா, கருணாநிதி அஞ்சலி
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவுக்கு தமிழக கவர்னர் ரங்கராஜன், முதல்வர் ஜெயலலிதா,முன்னாள் முதல்வரும் மூப்பனாரின் நீண்ட கால நண்பருமான கருணாநிதி மற்றும் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினார்கள்.
தமிழக கவர்னர் ரங்கராஜன் மூப்பனார் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் தனது இரங்கல்செய்தியில்,
ஒரு உண்மையான காந்தியவாதியை நாடு இழந்து விட்டது. அவரது இழப்பு இந்தியாவுக்கும், குறிப்பாகதமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றார்.
மூப்பனார் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மயிலாப்பூரில் உள்ள மூப்பனாரின் இல்லத்துக்குச்சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கு அவர் தனது இரங்கல் செய்தியில்கூறியிருப்பதாவது,
தலைவர் மூப்பனாரின் மறைவு எங்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதஒன்றாகும். மூப்பனார் தேசபக்திமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார். இறுதிவரை அவர் கடைபிடித்து வந்தமதசார்பற்ற கொள்கையும், எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையாத நிதானமும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அவரைப்பற்றி குறை சொன்னால் கூட கோபமடையாத பொருமையுடன், மிகச் சிறந்த அரசியல்வாதிக்குஎடுத்துக்காட்டாக விளங்கியவர். நாட்டில் உள்ள மனித நேயமிக்க பண்பாளர்கள் மிகச் சிலரில் மூப்பனாரும்ஒருவர்.
அந்த ஒப்பற்ற தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருணாநிதி:
மூப்பனாரின் நீண்டகால நண்பரும், திமுக தலைவருமான கருணாநிதி, எதிர்கட்சித் தலைவர் அன்பழகன், சென்னைமேயர் ஸ்டாலின் மற்றும் பல திமுக தலைவர்களுடன் மூப்பனாருக்கு அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கு கருணாநிதி நிருபர்களிடம் மூப்பனார் மறைவிற்கு தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது,
எத்தகைய அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் குன்றாத பிரியத்துடன்இருந்தவர் தலைவர் மூப்பனார்.
மூப்பனாருக்கும் எனக்கும் நீண்டகால நட்பு இருந்து வந்தது. அந்த நட்பில் எப்போதும் விரிசல் ஏற்பட்டதேஇல்லை.
அவரது இழப்பு தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், த.மா.கா. தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறினார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
தேசியவாதத் தூண் சாய்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மூப்பனார் காங்கிரஸ் பேரியக்கத்தின்கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications