பேரணி வன்முறை: உண்மையான ரவுடிகளைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்தஉண்மையான ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல போலீசாரும், திமுகவினரும் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தில் அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்தரவுடிகள் புகுந்து திமுகவினரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்து. இதையடுத்து அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த 15பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக்குமார் முன்பு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனதுதீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பேரணியின் போது போலீசார் 39 கேமராக்களைப் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர். இந்தக்கலவரத்தின் போது வெளியிடப்பட்ட போட்டோக்களையும், வீடியோ காட்சிகளையும் கவனித்துப் பார்க்கும்போது, கலவரத்தில் தலையில் துண்டு கட்டிய ரவுடி கும்பல் திமுகவினர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதுதெரியவருகிறது.
கடற்கரைப் பகுதியில் எந்தப் பேரணி நடந்தாலும் இது போன்ற வன்முறைக் கும்பல் கலவரத்தில் ஈடுபட்டுவருகிறது. இதுபோல 3ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி பேரணி நடத்திய போது இந்தப் பகுதியைச் சேர்ந்தகும்பல்தான் ஊர்வலத்தில் வந்தவர்களைத் தாக்கியது.
இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால் நீங்களோ நானோ கடற்கரைக்கே செல்ல முடியாத நிலைமைஏற்பட்டுவிடும். இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மைக்குற்றவாளிகள் அல்ல.
போலீசார் விரைந்து செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இதையடுத்து, வரும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசுதரப்பு வக்கீல் கணேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications