சென்னையில் சோனியா: மூப்பனாருக்கு அஞ்சலி
சென்னை:
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.
சோனியாவைப் பார்த்த மூப்பனாரின் மனைவி, மகள் இருவரும் கதறி அழுதனர். அவர்களுக்கு சோனியா ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களை அவர் சந்தித்தார். அவரிடம் காங்கிரஸ்-த.மா.கா. இணைப்புக்கு நடவடிக்கை எடுப்பீர்களா என நிருபர்கள் கேட்டனர்.இதற்கு பதிலளித்த சோனியா காந்தி கூறுகையில்,
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. மூப்பனாரின் மறைவால் மனம் வாடிப் போய் இருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய நாம்பிரார்த்திக்க வேண்டும். இந்த சோகமான சூழ்நிலையில் என்னால் அரசியல் பேச முடியாது.
காங்கிரஸ் கட்சியை முன்னின்று நடத்திக் காட்டியவர் மூப்பனார். அவரு ஒரு பிரிவைத் தான் உண்டாக்கினாரே தவிர, காங்கிரசை விட்டுஅவர் வெளியேறியதே இல்லை.
மூப்பனாரின் மறைவால் வேதனையந்ைதுள்ளேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
பலத்த பாதுகாப்பு
சோனியாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து மயிலாப்பூரில்உள்ள மூப்பனாரின் இல்லம் வரை சாலையின் இரு புறமும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர். விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அங்கு சோனியாவை நெருக்கக் கூட நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வைகோ அஞ்சலி
மூப்பனாரின் உடலுக்கு மதிமுக தலைவர் வைகோ, அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications