மூப்பனாரின் உருவாக்கிய த.மா.கா.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

1996ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு 30 நாட்கள் முன்புதான் தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார்உருவாக்கினார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் இயங்கியஅதிமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு ராஜீவ்காந்தி காலத்திலும், அதே கூட்டணி தொடர்ந்து வந்தது. பிறகு எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பிறகு அதிமுக தலைமைப் பொறுப்பேற்ற இந்நாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணிதொடர்ந்தது.

பிறகு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அவரை அடுத்து காங்கிரஸ் தலைமையேற்ற முன்னாள் பிரதமர்நரசிம்மராவும், அதிமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார்.

அதிமுக-காங். கூட்டணியை எதிர்த்த மூப்பனார்

1991ல் நடந்த பொதுத் தேர்தலில் மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் அதிமுகவும் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தது. 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் காங்கிரசில் இருந்த ஒரு பிரிவினருக்கு திருப்திஏற்படவில்லை.

இதனால் 1996ல் நடக்க விருந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழக காங்கிரசில் பெரும்பாலானோர் அதிமுகவுடன்மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வதை கடுமையாக எதிர்த்ததார்கள்.

நரசிம்மராவும் அப்போது பெயரளவில் சில தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து, ஏன் அதிமுகவுடன் கூட்டணிவைக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டார். மூப்பனாரும் நரசிம்மராவைச் சந்தித்து தனது எதிர்ப்புக்கானகாரணங்களை எடுத்துக் கூறினார்.

ஆனால் தமிழக காங்கிரசில் இருந்த பெரும்பாலான தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களுக்குமதிப்பக் கொடுக்காமல் மீண்டும் அதிமுகவுடன் தான் கூட்டணி என்று நரசிம்மராவ் அறிவித்தார்.

உருவானது த.மா.கா.

இதையடுத்து 1996ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சிதோன்றியது. "வளமான தமிழகம், வலிமையான பாரதம்" என்ற நிலையை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்றுஅதன் தலைவர் மூப்பனார் அறிவித்தார்.

மூப்பனாருடன் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன்,அருணாச்சலம் ஆகியோரும் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து, த.மா.காவில் சேர்ந்தார்கள்.

திமுகவுடன் கூட்டணி - 1996 தேர்தலில் அமோக வெற்றி

தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்த 3 நாட்களிலேயே, பத்திரிக்கையாளர் "சோ" ராமசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்ஆகியோரது முயற்சியில் திமுகவுடன் கூட்டணி கண்டது.

திமுக கூட்டணியில் 60 சட்டசபைத் தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. அவற்றில் 59தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சி ஆரம்பித்து 30 நாட்களில் தேர்தலைச் சந்தித்துகிட்டத் தட்ட 98 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்ற ஒரே கட்சி த.மா.காவாகத் தான் இருக்கமுடியும்.

திமுகவும் அந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. த.மா.கா. சட்டமன்றத்தில் முக்கியஎதிர்கட்சியாக செயல்பட்டு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தொடங்கியது.

நீண்ட இடைவெளிக்கு"ப் பிறகு 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திமுகவுடன் அடுத்து வந்த 2001 தேர்தலில் கூட்டணிவைக்க த.மா.கா. தயங்கியது. அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி - 2001 தேர்தலிலும் பெரும் வெற்றி

அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்த வண்ணமே இருந்த த.மா.கா. இறுதியில் அதிமுககூட்டணியிலேயே இணைந்தது.

அப்போது எந்தக் காரணத்திற்காக த.மா.கா. ஆரம்பிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அடுத்த தேர்தலிலேயேமறக்கப்படுகிறது என்று கூறி தமிழ் மாநில காங்கிரசில் இருந்து ப.சிதம்பரமும் அவரது ஆதரவாளர்களும்விலகினார்கள்.

பிறகு அவர்கள் தமிழ் மாறில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்து திமுகவுடன்கூட்டணி வைத்துக் கொண்டார்கள். இந்தத் தேர்தலிலும் 23 இடங்களில் த.மா.கா. வென்றது.

அது அதிமுகவின் தோழமைக் கட்சியாகவும், அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துக்கூறி, அதற்கு ஆக்கப்பூர்மான தீர்வு காணும் எதிர்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+