35 அடி குழியில் விழுந்து உயிருக்கு போராடும் சிறுவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 35 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்த 5 வயது சிறுவனை உயிருடன் மீட்க தீயணைப்பு படை,கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் போராடுகின்றனர்.

சென்னை துறைமுகப்பகுதி 4வது தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி நூரிஷா. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர்களது 2வது மகன் தமிழ்மணி (வயது 5). இந்த சிறுவன் மண்ணடி லிங்கச் செட்டித் தெருவில் உள்ளமா.எல்லப்ப செட்டியார் ஆரம்ப பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறான்.

வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து நண்பர்கள் சூரி, அஜித் ஆகியோருடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தான்.

குழியில் விழுந்தான் தமிழ்மணி

ஆரியபாதம் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி கட்டிடத்திற்கு முன்பு ஒரு பேப்பர் இருந்தது.அதன் அருகில் வந்த சிறுவன் தமிழ்மணி, அந்த பேப்பர் மீது காலை வைத்தான். அடுத்த நொடியே கண்இமைக்கும் நேரத்திற்குள் பேப்பருக்கு கீழே இருந்த 60 அடி பள்ளத்தில் விழுந்தான்.

தமிழ்மணி பள்ளத்தில் விழுந்தும் அவனுடன் வந்த நண்பர்கள் கூக்குரலிட்டனர். தண்ணீருக்காக "போர்வெல்"போடப்பட்டிருந்த குழியில்தான் அவன் விழுந்திருந்தான். அதன் ஆழம் 60 அடி. அகலம் ஒன்றரை அடி.

"போர்வெல்" தொழிலாளிகளின் அலட்சியம்

இந்த ஆழ்குழாய் கிணறை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், அந்த குழியை பேப்பரால் மூடிவிட்டு சாப்பிடச் சென்றிருந்த நேரத்தில்தான், தமிழ்மணி உள்ளே விழுந்துவிட்டான்.

சிறுவன் குழியில் விழுந்ததும் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குடியிருந்தவர்கள்சிறுவனை காப்பாற்ற முயன்று முடியாத காரணத்தால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது.

தீயணைப்புப் படையினர் விரைவு - முயற்சிகள் தோல்வி

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் முதலில் நீளமான டியூப் ஒன்றை குழிக்குள் செலுத்தி 35அடி ஆழத்தில் தமிழ்மணி சிக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

அவன் மூச்சு திணறி விடக்கூடாது என்பதற்காக ஆக்சிஸன் சிலிண்டர் கொண்டுவரப்பட்டு டியூப் மூலம் குழிக்குள்கியாஸ் செலுத்தப்பட்டது.

அதன் பின் இரும்பு கம்பி கொக்கியை உள்ளே அனுப்பினர். "உன் சட்டையில் கொக்கியை மாட்டிக் கொள்.உன்னை மேலே தூக்கி விடுகிறோம்" என்று மேலே இருந்து கூறினர்.

சிறுவனும் அந்த கொக்கியில் சட்டையை மாட்டினான். கொக்கி மெதுவாக மேலே தூக்கப்பட்டது. ஆனால் சட்டைகிழிந்து சிறுவன் உள்ளே மாட்டிக் கொண்டான். அவனுடைய புத்தகபை மட்டும் மேலே வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+