கோவில்பட்டியில் ஈவ்-டீசிங்: 2 பேர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாணவியிடம் முத்தம் கேட்டு, தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆறுமுகசாமி முன்பு கடம்பூரில் வசித்தபோது, கடம்பூரில் இருந்து கயத்தாறு வரை வேன் மூலம் வந்து, அதன் பின்பஸ் மூலம் கல்லூரிக்கு சென்று வந்தார் சுந்தரி. அந்த வேனின் டிரைவர் ராஜாமுகமது (வயது 30), சுந்தரியைஅடிக்கடி கேலி செய்து, தொந்தரவு செய்து வந்தார்.
இதுகுறித்து, சுந்தரி தன் தந்தையிம் கூறினார். இதையடுத்து ஆறுமுகசாமி தனது வீட்டை கோவில்பட்டிக்குமாற்றினார். சுந்தரி பஸ் மூலம் கல்லூரிக்கு சென்று வந்தார்.
ஆனாலும், ராஜாமுகமது விடாது சுந்தரியை கேலி செய்து வந்தார். இதையறிந்த ஆறுமுகசாமி சம்பவத்தன்று காலைதன் மகளுக்கு பாதுகாப்பாக பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த ராஜாமுகமதுவும், அவரது நண்பர் முத்துவும் சுந்தரியை கேலி செய்தனர். சுந்தரியைநெருங்கி வந்த ராஜாமுகமது, "எனக்கு ஒரு முத்தம் கொடு" என்று கேட்டு அவமானப்படுத்தினார்.
இதைப்பார்த்த ஆறுமுகசாமி, "ஏன் என் மகளைத் தொல்லை செய்கிறாய்? உன் மேல் போலீசில் புகார்செய்துவிடுவேன்" என்றார். இதனால் கோபமடைந்த ராஜாமுகமது, ஆறுமுகசாமியை அரிவாளால் வெட்ட வந்தார்.பயந்து போன ஆறுமுகசாமி, அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சல் போட்டதும், ராஜாமுகமது, தன் நண்பருடன் தப்பி ஓடி விட்டார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் ஆறுமுகசாமி புகார் செய்தார். இதைத் தொடர்ந்துபோலீார் வழக்கு பதிவு செய்து ராஜாமுகமதுவையும், முத்துவையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், கயத்தாறு கட்டபொம்மன் சிலையருகே நின்று கொண்டிருந்த ராஜாமுகமதுவையும், முத்துவையும்போலீசார் கைது, செய்து கோவில்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
ராஜாமுகமதுவையும், முத்துவையும் 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் சுமதி உத்தரவிட்டார்.
ராஜாமுகமது திருமணமானவர். இவருக்கு அலிபாத்திமா (25) என்ற மனைவியும் பிஜாஸ் (7) என்ற மகளும்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் ஈவ்- டீசிங்
தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளை ஈவ் -டீசிங் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே மத்திய பாகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீமராஜ் ரோந்து சென்றார்.
ஜெயிலானி தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 18). இவர், பள்ளி முடிந்து வந்த மாணவிகளை பார்த்துபாட்டு பாடிகிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட வீமராஜ், அவரை உடனே கைது செய்தார். ஜாபர்அலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications