காவிரிப் பிரச்சனை: மேட்டூர் நீர் மட்டத்தை ஆராய்ந்தது மத்தியக்குழு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

காவிரி நதிநீர் நீர்வள ஆய்வுக் குழுவினர் வியாழக்கிழமை மேட்டூர் அணையை பார்வையிட்டனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களின் சாகுபடிக்கு போதிய அளவு நீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா

இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி கூட்டப்படும்என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்தார்.

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு காவிரி நதி நீரைத் திறந்துவிடுவது குறித்து தமிழக-கர்நாடக அதிகாரிகள்நேரடி பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார் ஜெயலலிதா.

பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த கிருஷ்ணா, பேச்சுவார்த்தை குறித்த தேதியை விரைவில் தெரிவிப்பதாகவும்ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

காவிரி நதி நீர் விஷயத்தில் கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுக்காக தமிழக அரசுகாத்திருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் காவிரி நீர்வள ஆய்வுக் குழுவினர் காவிரி படுகை பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய வியாழக்கிழமை தமிழகம் வந்தனர்.

அவர்கள் மேட்டூர் அணைக்கு சென்று, அணையின் நீர் இருப்பு குறித்து நேரில் கண்டறிந்தனர்.

தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரி மோகன கிருஷ்ணன் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம் பற்றியும்காவிரி நீர் இல்லாதததால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்தார்.

மேலும், காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, கர்நாடகம் இதுவரை 109 டி.எம்.சி தண்ணீரைதிறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 48.5 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது.

மேட்டூரில் தற்போது 18.6 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு, இன்னும் 12நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் முகாமிட்டுள்ள நீர்வள ஆய்வுக்குழுவினர், விரைவில் கர்நாடகாவுக்கும் சென்று, அங்குள்ளநிலை பற்றியும் ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன் பின் அவர்கள் டெல்லி சென்று, தங்கள் அறிக்கையை நடுவர் மன்றத்திடம் சமர்ப்பிப்பார்கள். நீர்வளஆய்வுக்குழுவின் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களுடைய அறிக்கைதான்,செப்டம்பர் 6ம் தேதி நடைபெறவிருக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+