கேள்விக்குறியில் த.மா.காவின் எதிர்காலம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைந்ததை அடுத்து அவர் தோற்றுவித்த த.மா.கா.வின் எதிர்காலம்கேள்விக்குறியதாகியுள்ளது.
இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து போட்டியிட்ட 60தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணியுடன் சேர்ந்து அவர் சந்தித்த மக்களவைத் தேர்தலில் 20எம்.பி. தொகுதிகளை வென்றார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவை மூப்பனார், ரஜினியின் ஆதரவு,திமுகவுடன் கூட்டணி.
அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்றார்.
இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.
சமீபத்தில் த.மா.கா. வில் உட்கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்துவதுஎன்று தீர்மானித்திருந்தார் மூப்பனார்.
மூப்பனாரின் உடல்நிலை மோசமடைந்தததைத் தொடர்ந்து அவரது கட்சிக்காரர்கள் அனைவரும் கட்சிப்பொறுப்புகளை மூப்பனாரின் மகன் கோவிந்த வாசனிடம் ஒப்படைக்க கேட்டார்கள். ஆனால் வாரிசு அரசியலில்நம்பிக்கை இல்லாதவரான மூப்பனார் அதற்கு ஆரம்பம் முதலே சம்மதிக்கவில்லை.
இதற்கிடையில் மூப்பனார், த.மா.காவை மீண்டும் காங்கிரசில் இணைத்துவிட விரும்புவதாகச் சொல்லப்பட்டது.இந்நிலையில் மூப்பனார் மறைந்து விட்டார்.
இப்போது மூப்பனார் மகன் கோவிந்தவாசனைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் போவதாக அக்கட்சியின்அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மூப்பனார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது,
த.மா.காவை மீண்டும் காங்கிரசுடன் இணைப்பதுதான் மூப்பனாரின் ஆசையாக இருந்தது. த.மா.கா. மீண்டும்காங்கிரசில் இணைந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெரும் என்றார்.
இதையடுத்த த.மா.கா. தனித்தே இயங்குமா அல்லது காங்கிரசில் இணைக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில்பலமாக எழுந்துள்ளது.
எப்படியும் இதற்கு விடை இன்னும் சில நாட்களிலேயே தெரிந்துவிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications