For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூப்பனார் மரணம்: கரூரில் வன்முறை

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மரணமடைந்ததை அடுத்து கரூரில் த.மா.காவினர் வன்முறையில்ஈடுபட்டனர்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் த.மா.கா. நிறுவனருமான மூப்பனார் மறைந்ததையடுத்து கரூரில் த.மா.கா.தொண்டர்கள் சாலை மறியல், கடையடைப்பு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் கரூர் மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், இளைஞர்அணித் தலைவர் தனசீலன் உட்பட பல த.மா.கா. பிரதிநிதிகளும், தொண்டர்களும் பஸ் நிலையம் அருகில் இருந்தகடைகளை அடைக்கச் சொல்லி தகராறு செய்தனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்களை நகர்த்த முயன்ற சில டிரைவர்களுக்கு அடி, உதையும் விழுந்தது. பிறகுசாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாதபடி "பேரிகார்ட்ஸ்"களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில்ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளைஅகற்றினர்.

பிறகுகோவை சாலையில் ஒரு கும்பல் அந்த வழியாக வந்த பஸ்கள் மீது கல் வீசியது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம், தாந்தோடின டவுன் பஞ்சாயத்துத் தலைவர்ரங்கசாமி, மாவட்ட த.மா.கா.துணைத் தலைவர் சுப்ரமணி ஆகியோர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று சுபமுகூர்த்த தினமாக இருந்தததால் மக்கள் திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்குச் செல்ல பஸ்கிடைக்காமல் அவதியுற்றனர். பிறகு கொதிப்படைந்த பொது மக்களில் சிலர் அந்த வழியாக வந்து கொண்டிருந்தகலெக்டர் அண்ணாமலையின் காரை மறித்து, பஸ் போக்குவரத்து பாதிப்பை தடுத்து நிறுத்தும்படி கோரினர்.

அவர் "நான் எஸ்.பியுடன் பேசியுள்ளேன், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்த பின்னர்மக்கள் விலகிச் சென்றனர்.

கரூர் நகரம் முழுவதும் நேற்று பதற்றத்துடன் காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X