அரசின் போர்நிறுத்த அறிவிப்பை நிராகரித்தனர் புலிகள்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அறிவித்துள்ள இரு தரப்பு போர்நிறுத்தத்திற்கு விடுதலைப்புலிகள்ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களைத் தீர்க்கவும் அவர் விரும்பினார்.ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து போர்நிறுத்தம் செய்யுமாறு புலிகளுக்கு அதிபர் சந்திரிகா அழைப்பு விடுத்தார். ஆனால் இதற்குப்புலிகள் ஒத்துழைப்புத் தர மறுத்துவிட்டனர்.
இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறியதாவது,
சந்திரிகா அரசு எதிர்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதை மறைக்கவும்,மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியிலும் இலங்கை அரசு இந்த போர்நிறுத்த முடிவை அறிவித்துள்ளது.
இது சந்திரிகா அரசின் கண்துடைப்பு முயற்சி.
இலங்கை அரசுக்கு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உண்மையான அக்கரை இல்லை. எனவே நாங்கள்போர்நிறுத்த முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவது இல்லை. இவவாறு பாலசிங்கம் கூறினார்.
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் புலிகள் அறிவித்த போர்நிறுத்தத்தை அரசு மீறி, புலிகள் மீது தொடர்ந்துதாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications