இந்திய அமைச்சரவை நாளை மாற்றம்
டெல்லி:
மத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்படுகிறது. புதிதாக 2 முதல் 6 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. சிலஇணை அமைச்சர்கள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். 6 அமைச்சர்கள் வரை பதவி இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள வெங்கைய்யா நாயுடுவை மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சத்யநாராயண ஜய்த்யா, ஜவுளித்துறை இணையமைச்சர் தனஞ்சய குமார் ஆகியோர் மீது பிரதமர்அதிருப்தியில் உள்ளார். இதனால் இந்த இருவரின் பதவிகளும் பறிக்கப்படலாம்.
அரசு முதலீடுகளைத் திரும்பப் பெறும் துறைக்கான இணையமைச்சராக உள்ள அருண் ஷோரி கேபினட் அமைச்சராக அந்தஸ்துஉயர்த்தப்படுவார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர் கரியா முண்டாவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் தான் மத்திய அமைச்சரவையில் வாஜ்பாய் மாற்றம் செய்தார். உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டு ராஷ்ட்ரீயலோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் மத்திய அமைச்சராக்கப்பட்டு விவசாயத்துறை வழங்கப்பட்டது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications