சிகரெட் பாக்கெட் எச்சரிக்கை போதாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி:
"புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது" என்று சிகரெட் பாக்கெட்டுகளிலும் காணப்படும் எச்சரிக்கைவிளம்பரம் போதாது என்று சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர்மற்றும் அஹமதாபாத் நகர போலீஸ் கமிஷனர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
"புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்று அரசு எச்சரிக்கையாக அனைத்து சிகரெட் பெட்டிகளிலும்எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள் யாரும் இதைப் பொருட்படுத்துவதில்லைை. அவர்கள் தொடர்ந்து "அடித்து"க்கொண்டே தான் இருக்கிறார்கள். சிகரெட் "அடிப்பதால்" அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில்இருப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது.
மேலும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சிகரெட் பழக்கத்தால் புற்று நோய் போன்ற கொடிய வியாதிகளால்அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்களின் குடும்பமே பாழாகிப் போகும் நிலை உருவாகி விடுகிறது.
இதனால் பொது இடங்களில் புகை பிடித்தல், பான் பராக் குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான முரளி தியோரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒருமனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
1975ம் ஆண்டு இயற்றப்பட்ட உற்பத்தி மற்றும் விநியோகம் சம்பந்தப் பட்ட விதிகளை பெரும்பாலான சிகரெட்கம்பெனிகள் கடைபிடிப்பதில்லை. அவர்கள் மீது இந்த கோர்ட் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யவும் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்என்று அம்மனுவில் கோரி, ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார் முரளி.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஷா மற்றும் சேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவந்ததது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த விதிமுறைகளை சிகரெட் கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவாஎன்பதைக் கண்காணிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்வது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறுமத்திய-மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
மேலும் இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் விரைவாகநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications