டான்சி வழக்கு - சசிகலா தரப்பு வாதமும் முடிந்தது
சென்னை:
டான்சி வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பு வாதம்நேற்று (வியாழக்கிழமை) முடிந்தது.
அவர் தன் வாதத்தின்போது, மேலும் கூறியதாவது:
கடந்த 1990ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துறையின் புதிய உத்தரவில், நிலங்களை விற்பதற்குடான்சி நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டான்சி நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று கருத வாய்ப்பில்லை. கம்பெனிக்குச் சொந்தமான சொத்தைஜெயலலிதா வாங்கியதிலும் தவறில்லை.
மேலும், இந்த நில விற்பனையில், சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.ஆதாரமே இல்லாமல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தனி நீதிமன்றம்.
இத்துடன் தன்னுடைய தரப்பு வாதம் முடிவடைந்தது என்று வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.
இதையடுத்து, பிற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களை நீதிபதி பாலசுப்பிரமணியம் அழைத்தார். ஆனால், அவர்கள்அப்போது நீதிமன்றத்தில் இல்லாததால், வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்த விசாரணை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications