ரூ. 100 கோடி அறக்கட்டளை சொத்து
சென்னை:
மூப்பனாரின் மறைவையடுத்து, "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை"யின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் திடல், காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் உள்பட பல இடங்கள்"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை"க்குச் சொந்தமானதாகும்.
ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர் அரங்கம், அறக்கட்டளைக்கு ரூ.5.50 கோடி வரை கடனைஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் பேசுகிற விதத்தில் பேசி, அந்தக் கடனைத் தீர்ப்பதற்குஆலோசனைகள் பல வழங்கியவர் மூப்பனார்தான் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் கூறின.
ஆரம்பத்தில், இந்த அறக்கட்டளையில் 7 பேர் வரை அறங்காவலர்களாக இருந்தனர். பின்னர் படிப்படியாக இதன்எண்ணிக்கை குறைந்து, தற்போது 2 பேர் மட்டுமே அறங்காவலர்களாக இருந்தனர்.
ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைத் தன்னிடம் வைத்துள்ள இந்த அறக்கட்டளையை மூப்பனாரும்ராமசாமி உடையாரும்தான் அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.
தற்போது, மூப்பனாரையும் இழந்துவிட்ட நிலையில், ஒரே ஒருவரை மட்டும் அறங்காவலராகக் கொண்டு,தத்தளித்துக் கொண்டிருக்கிறது "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை".
வாழப்பாடியின் வழக்கு
"2 பேர் மட்டுமே அறங்காவர்களாக இருப்பதை அறக்கட்டளையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட விதிகளின்படி,காலியாக இருக்கும் 5 அறங்காவலர் பதவிகளையும் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரி தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு பொதுநல வழக்கை சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்தார்.
நிலுவையில் உள்ள அந்த வழக்கு முடிந்த பிறகு, அல்லது, தமாகா-காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் எடுக்கும் முடிவைப்பொறுத்துதான் அறக்கட்டளையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications