மேட்டூர் நீர்மட்டம்: தமிழக அதிகாரிகளும் ஆய்வு
மேட்டூர்:
தமிழக வருவாய்த்துறை முதன்மை ஆணையாளர் சுகனேஷ்வர் மற்றும் காவிரி ஆற்றின் தலைமைப் பொறியாளர்பொன்னுசாமி ஆகியோர் மேட்டூர் அணையில் நீர்மட்டத்தை ஆய்வு செய்தார்கள்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களின் சாகுபடிக்கு போதிய அளவு நீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளது.
தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி கூட்டப்படும்என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் காவிரி நீர்வள ஆய்வுக் குழுவினர் காவிரி படுகை பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய வியாழக்கிழமை தமிழகம் வந்தனர்.
அவர்கள் மேட்டூர் அணைக்கு சென்று, அணையின் நீர் இருப்பு குறித்து நேரில் கண்டறிந்தனர்.
தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரி மோகன கிருஷ்ணன் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம் பற்றியும்காவிரி நீர் இல்லாதததால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்தார்.
இவர்களுடைய அறிக்கைதான், செப்டம்பர் 6ம் தேதி நடைபெறவிருக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில்முக்கியப் பங்கு வகிக்கும்.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் தமிழக வருவாய்த்துறை மற்றும் நிலத்துறையின் முதன்மை ஆணையாளர்சுகனேஷ்வர் மற்றும் காவிரி ஆற்றின் தலைமைப் பொறியாளர் பொன்னுசாமி ஆகியோர் மேட்டூர் நீர்மட்டத்தைஆய்வு செய்தார்கள்.
இவர்கள் மேட்டூர் அணைக்குள் இறங்கி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் நிலை, நீர்வரத்து, திறந்து விடப்படும் நீரின்அளவு மற்றும் அனையின் தற்போதைய நீர்மட்டம் போன்றவற்றை ஆய்வு செய்தார்கள்.
பிறகு சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டக் கலெக்டர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் அபூர்வா ஆகியோருடன்ஆலோசனை செய்தார்கள்.
வரும் 6 ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அனையின் நிலைகுறித்து தமிழக அரசு எடுத்துரைக்க இந்தக் குழுவின் அறிக்கைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications