திமுகவினர் மாடுகளா? - சட்டசபையில் துரைமுருகன் வாக்குவாதம்
சென்னை:
திமுகவினரை மாடுகள் என ஏன் வர்ணித்தீர்கள் என்று சபாநாயகர் காளிமுத்துவுடன் முன்னாள் அமைச்சர்துரைமுருகன் வாக்குவாதம் செய்தார்.
விவாதத்தின் போது எம்.ஜி.ஆர். அதிமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசும் போது பரிதி இளம்வழதி மற்றும் ரங்கநாதன்எம்.எல்.ஏக்கள் கைது பற்றிப் பேசினார். அதற்கு சட்ட அமைச்சர் பொன்னையன் எழுந்து நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றிச் சட்டமன்றத்தில் பேசுவது தவறு என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து, "கைது செய்யப்பட்டனர் என்றுதானே ஆஸ்டின் சொன்னார். அதில்என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்டார்.
அப்போது சபாநாயகர் துரைமுருகனிடம், "அதிமுக உறுப்பினர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சரின் தம்பி கைதுசெய்யப்பட்டது குறித்துப் பேசியதற்கு, கோபமாக "தொட்டாச்சிணுங்கி போல" வெளிநடப்பு செய்தீர்களே" என்றார்.
இதற்கு துரைமுருகன் எழுந்து சபாநாயகரிடம், "நீங்கள் எங்களை சமீப காலமாக "உவமானப்படுத்துவது" எங்கள்மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு எங்களை "மாடு" என்று வர்ணித்தீர்கள்.இப்போது "தொட்டால் சிணுங்கி" என்கிறீர்களே?" என்று கேட்டார்.
அதற்கு சபாநாயகர், "உவமைக்காக அப்பபடிச் சொன்னேன். "மாடு போகும் வழியில் தான் கயிறும் போகும்" என்றுநான் சொன்னதற்குத் தவறான, நேரடி அர்த்தம் கொள்ளக் கூடாது. திருவள்ளுவர் கூட கடுமையாகஉழைப்பவர்களை "மாடு" என்று திருக்குறளில் கூறியுள்ளார்" என்றார்.
பிறகு முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "தொட்டாச்சிணுங்கி" என்றால் நல்ல வார்த்தைதானே, "சென்சிடிவ்"என்றுதானே அதற்கு அர்த்தம் என்றார்.
அதற்கு சபாநாயகர், "துரைமுருகன் எப்போதும் "சென்சிடிவ்" ஆகத் தான் இருப்பார். ஒருமுறை எம்.ஜி.ஆரைப்பற்றிப் பேசும்போது சபையில் மயங்கியே விழுந்துவிட்டார். பிறகு எம்.ஜிஆர்., தனது காரிலேயே துரைமுருகனைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்" என்று காளிமுத்து கூறினார்.
துரைமுருகன் அதற்கு "ஆமாம்" என்பதைத் போலத் தலையாட்டினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications