திமுக பேரணி வன்முறை: பத்திரிக்கையாளர் விசாரணை கமிஷன் முன் போலீஸ் கமிஷனர்-டிஜிபி ஆஜர்
சென்னை:
பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் முன், தமிழக டி.ஜி.பி. ஏ. ரவீந்திரநாத்தும்சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனும் ஆஜராகி, கடந்த 12ம் தேதி நடந்த பேரணியின் போது நடந்தகலவரம் குறித்தும், போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும், தங்கள் தரப்பு நியாயம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
பேரணி டி.ஜி.பி. அலுவலகத்தை அடைந்த போது வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் தடியடிபிரயோகமும், கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
பத்திரிக்கையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்து. இதில் பல பத்திரிக்கையாளர்கள் பலத்த காயமடைந்தனர்.போலீசார் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பத்தரிக்கையாளர்கள் கடந்த மாதம் 15ம்தேதி அடையாள உண்ணாவிரதமும் இருந்தனர்.
பத்திரிக்கையளர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை கமிஷன்ஒன்றையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நியமித்தது.
போலீசாரையும், பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களையும் இந்த கமிஷன் விசாரித்து அறிக்கை சமர்பிக்கும்என்றும் அதன் பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் முடிவு எடுப்பார்கள் என்றுஅப்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரஸ் கவுன்சில் அமைத்த விசாரணை கமிஷன் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
விழுப்புரம் தானிய கிட்டங்கியில் புழுத்த அரிசி இல்லை என்று நிரூபிக்க சென்ற முன்னாள் அமைச்சர்பொன்முடியுடன் சென்ற சன் டிவி நிருபர் சுரேஷை மட்டும் கைது செய்ததற்கான காரணத்தை கூறுமாறு விழுப்புரம்சப் -இன்ஸ்பெக்கடரை பிரஸ் கவுன்சில் அமைத்த விசாரணை கமிஷன் கேட்டுக் கொண்டது.
விசாரணை கமிஷன் முன் சனிக்கிழமை ஆஜரான விழுப்புரம் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் கைதுசெய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கூறினார்.
சனிக்கிழமை விசாரணை கமிஷன் முன் ஆஜராக வேண்டிய முத்துக்கருப்பனும், ரவீந்திரநாத்தும் ஆஜராகவில்லை.அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆஜராவார்கள் என்று அவர்களது வக்கீல் கூறினார். இதன்படி, இன்று காலை இவர்கள்2 பேரும் பத்திரிக்கையாளர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, பேரணியின் போது நடந்தது என்னஎன்பதையும். தங்கள் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தனர்.
இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்த விசாரணை கமிஷன் உறுப்பினர்கள்,பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து அவருடைய கருத்தையும் கேட்டறிந்தனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியையும் அவர்கள் சந்தித்தனர். அவர் அப்போதுபேரணி வன்முறை குறித்து திமுக பதிவு செய்து வைத்திருந்த வீடியோ கேசட்டை அவர்களுக்கு போட்டு காட்டினார்.
பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களையும் விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications